
தமிழ்ப் புனைவிலக்கியத்தில் தன்னுடைய தனித்துவமான நடைக்காகவும் மீபொருண்மை சித்திரிப்புக்காகவும் முக்கியமான எழுத்தாளராக லா.ச.ராமமிருதம் கருதப்படுகிறார். மலேசியச் சூழலில் லா.ச.ராமமிருதத்தின் மனமொழியும் சிந்தனையும் முயங்கும் எழுத்துநடை சார்ந்த பாதிப்பை எழுத்தாளர் சீ.முத்துசாமியின் எழுத்துகளில் காணலாம். அதைத் தவிர, லா.ச.ராமமிருதத்தின் எழுத்துகள் குறித்த வாசிப்பும், கலந்துரையாடலும் மலேசிய வாசகச்சூழலில் அதிகமும் இடம்பெறவில்லை. தமிழாசியா மாதந்தோறும் நடத்தி வரும் சிறுகதை…