Tag: லீகாட்

லீகாட்: பருவக் கோளாறின் கொந்தளிப்பு

ஒரு முழுமையான வாழ்க்கையைச் சொல்வதுதான் நாவல் என்கிறார்கள் சான்றோர்கள். ஆனால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கையிலிருந்து நாவலை உருவாக்குவது எளிதானதல்ல. அது கைதேர்ந்தவர்களின் திறன்களால் மட்டுமே கூடிவருவது. தரையில் கொட்டிய தானியங்களைப்போல  விரவிக்கிடக்கிறது வாழ்க்கை. அதனைப் பொறுமையாகப் பிரித்து எடுத்து உணவாகச் சமைப்பதற்கு ஒப்பானதுதான் நாவல். அதுவே ஒரு கட்டமைப்புக்குள் அடங்கும்போதுதான் கலையாகிறது. அந்த ஒருங்கமைவுக்குள் கூடிவராமல்…

பின் தொடர்ந்த யட்சி

இது என் நான்காவது நாவல். நான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டிய நாவல் இதுதான். 2000இல் மன்னன் மாத இதழில் ‘பருவகாலப் பறவைகள்’ எனும் தொடரை எழுதியபோது மலேசிய இலக்கியச் சூழலில் சலசலப்பு ஏற்பட்டது.இடைநிலைப்பள்ளி மாணவர்களின் வாழ்வை அப்பட்டமாகச் சொன்ன தொடர்கதை அது. எனவே அவர்களின் மொழி அதில் வெளிபட்டது. அக்கினி சுகுமார் உள்ளிட்ட நான் மதிக்கும்…