
2022, நவம்பர் 26 ஆம் திகதி மதியம் இரண்டு இருக்கலாம். சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்திலிருந்து ‘ஜார்ச் டவுன் இலக்கிய விழா’வில் கலந்துகொள்ள ஜெயமோகன், அருண்மொழி நங்கை, ஜி.எஸ்.எஸ்.வி நவின் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு பினாங்கு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தேன். நாற்பது நிமிட பயணம். அந்தப் பயணத்தில்தான் என் மனதில் வைத்திருந்த திட்டமொன்றை ஜெயமோகனிடம் பகிர்ந்துகொண்டேன்.…
