Author: ம.நவீன்

வாழும் தமிழ் இலக்கிய விழா: தீரா பெருங்கனவு

2022, நவம்பர் 26 ஆம் திகதி மதியம் இரண்டு இருக்கலாம். சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்திலிருந்து ‘ஜார்ச் டவுன் இலக்கிய விழா’வில் கலந்துகொள்ள ஜெயமோகன், அருண்மொழி நங்கை, ஜி.எஸ்.எஸ்.வி நவின் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு பினாங்கு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தேன். நாற்பது நிமிட பயணம். அந்தப் பயணத்தில்தான் என் மனதில் வைத்திருந்த திட்டமொன்றை ஜெயமோகனிடம் பகிர்ந்துகொண்டேன்.…

வல்லினம் விருது விழா : 8 மாத நினைவுக்குறிப்பு

வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு என முடிவானப்பின் மே 11-ஆம் திகதி வல்லினம் குழுவினரோடு சென்று காஜாங் நகரில் அவரைச் சந்தித்தேன். அந்நாளில் அ. பாண்டியன் குடும்பப் பணியாக காஜாங் வந்திருந்ததால் அந்நாளே பொருத்தமானது என முடிவானது. அரவின் குமார், ஆசிர் லாவண்யா ஆகியோரும் இணைந்துகொண்டனர். ‘காஜாங் சாத்தே’ பிரபலமான உணவகம். அங்கு…