தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் தமிழ் இலக்கியம் தொடர்ந்து நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும் ஒப்பீட்டளவில் சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியம் என்று தனித்த அடையாளங்களைப் பெறுவதில் இன்றும் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் படைப்புகளை ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பெருநிலங்களில் குடியேறிய தமிழ் எழுத்தாளர்களின் புலம்பெயர் இலக்கியங்களோடு ஒப்பிட்டு…