மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு!

02ஒரு தலை ராகமாக ஊடகங்களில் செய்திகள் .உயரத்திலிருந்து கோழிக்குஞ்சு நடமாட்டத்தை

கூர்மையாக கவனிக்கும் பருந்துபோல  வெளிநாடுகள் மலேசியாவை பார்த்துக் கொண்டிருகின்றன. ஜாதகக் காரர்கள், என் கணித நிபுணர்கள், கேரளா நம்பூர்தி, இந்தோனேசியா போமோ ஆகியோர்களை இரவு விருந்தோம்பலில் கவனிக்கும்  படுபிசியில் அரசியல்வாதிகள்.

ஹோட்டல் ரூம்பில் நடக்கும் உள்ளரங்கு விளையாட்டு பொது மைதானம் வரை பார்வைக்கு வைக்கும் அசிங்கம்.

முன்னாள் பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள் முகாம் மாறுதல், எந்தத் தேர்தலிலும் இல்லாத சுயேச்சை வேட்பாளர்களின் அதிகமான எண்ணிக்கை,வான்குடையிலிருந்து வந்திறங்கியிருக்கும் புதுமுக வாக்காளர்கள், புரளும் பணம்,சரணடைந்துவிடும் போராட்டம், புறமுதுகு காட்டுதல் என்று வித விதமான, கலர் கலரான, மனிதனின் நடவடிக்கைகள்.

மே 5-ஆம் திகதி குறிவைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது.

அன்வாரா? நஜீப்பா? தேசிய முன்னணியா? மக்கள் கூட்டணியா? எனும் கேள்விக்கு பிழையில்லா பதிலை எழுதும் முயற்சியில் இந்த நகர்வு ஒரே பதிலுக்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறது. மலேசிய அரசியல் பங்களிப்பில் இந்தியர்களின்

செல்வாக்கு 3ஆவது நிலையில் வைக்கப்பட்டிருப்பதால் பொதுத் தேர்தல்களில்,மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கிறோம் என்று கூறிவரும் ம.இ.காவுக்கு 12 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட்டு, மந்திரிகளாகி, சட்டசபையிலும்,நாடாளுமன்றத்திலும்  தலைவர்கள் ஆஜராகி வந்துள்ளனர்.

11ஆவது பொதுத் தேர்தல் வரை கழுதையைக் கூட வெற்றிப் பெற வைக்கும் விலங்கியல் நிபுணம் பெற்ற தேசிய முன்னணியின் செல்வாக்கு இந்தியர்களின் உரிமைக் குரலாக வெடித்த இண்ட்ராப்பின் கொதிப்பலையில் 12ஆவது பொதுத் தேர்தலில் வெந்து மூழ்கியது.  இண்ட்ராப்புடன் தெருவோரம் நின்று ‘மக்கள் சக்தி’ என்று முழக்கம் இட்ட எதிர்கட்சிகளுக்கும்  அடித்தது லாட்டரி சீட்டு. போராட்டத்தில் சிந்தப்பட்ட ரத்தக் கரைகளை பாதுகாப்பு தடுப்புச் சட்டத்துக்குள்  வைத்து துடைத்தது தேசிய முன்னணி அரசாங்கம். சமுதாயமா? குடும்பமா? பசியா? பதவியா? என்று கேட்டுக் கொண்டே எதிராளிகளை மடக்கிப் போட்டது அரசாங்கம்.

நம்பியிருந்தவர்கள் விலைபோனார்கள், போராடியவர்கள் சிறையில் அடைபட்டார்கள். அடைபட்டவர்கள் அடங்கியும் போனார்கள்.

 5 மாநிலங்களில் அமர்ந்து கொண்டு பெரியதாக எதையும் சாதித்து விட முடியாது.புத்ரா ஜெயாவை கைப்பற்றினால், விடுதலை பிறக்கும் என்றுணர்ந்த எதிரணி அரசியல் தலைகள் ஓரணியில் நின்று மக்கள் கூட்டணியானது. சுரண்டல்கள், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அனைத்தையும் பூண்டோடு ஒழிக்க உறுதிபோண்டு வரலாற்று சாதனையாக பாஸ் கட்சியுடன் டி.ஏ .பியும் கரம் கோர்த்து அன்வார் இப்ராஹீம் தலைமையில் புதிய நம்பிக்கையை நோக்கி இந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் மக்களுக்கு விடியல் கொண்டு வர  வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சீனர்களின் எழுச்சிக்கு இதுநாள் வரை காத்து வருகின்ற சுரண்டல்களை காப்பற்றுவதற்கும், பரம்பரைப் பரம்பரையாக திருடர்களை வளர்பதற்கும் மக்களுக்கு கரிசனம் காட்டுவதுபோல உதவித் திட்டங்கள் பல நூறு கோடி வெள்ளிகளை தின்று தீர்த்தாலும், எதற்கும் மசியாத சீன வர்க்கம் ஒரே முடிவில் இருக்கிறார்கள்.

மாற்றுவோம் என்று அவர்கள் முடிவெடுத்தப் பிறகு அவர்கள் பேச்சையே அவர்கள் கேட்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் அமைதியாக இருந்து தங்களின் எதிர்ப்பை வாக்கு சீட்டுகளில் செலுத்தி அறிவுப் பூர்வமாக செயல்படுகின்றனர். இவர்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் நலனுக்காக மாற்றத்தைக் கொண்டுவருவதில் ஒற்றுமையாக இருந்து காரியத்தை முடித்துக் காட்டுகின்றனர்.

அன்று சுய பொருளாதரத்தை நம்பி வாழ்ந்த சீன மக்கள் இன்று கல்விக்கு இந்தியர்களைவிட அதி முக்கியத்துவம் தருகிறார்கள். இவர்கள் கவனம் கல்வியின் பக்கம் அதிகமாக திரும்பிய போது தகுதி இருந்தும் இடம் மறுக்கப்படும்போது  அதனை சவாலாக ஏற்று வெளிநாடுகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கின்றனர்.

நாட்பட நாட்பட தகுதி உள்ளவர்களுக்கு உரிமை வழங்கவேண்டும் என்ற உணர்வு மேலோங்கிட தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளைக் கண்டு அதிருப்தி அடைந்த இவர்கள், அதிக நாட்கள் நாற்காலியில் ஒரே ஆட்சியை அமரவைத்தால் நம் சமுதாயத்துக்கு உட்கார நாற்காலி கூட இருக்காது என்பதை உணர்ந்து  இந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியிடமிருந்து நாற்காலியைப் பறித்து, மக்கள் கூட்டணியிடம் பரிசோதனை முறையில் 5 வருடங்களுக்கு தரமுடிவு செய்துள்ளனர்.

 சீனர்கள் எடுத்த முடிவுக்கும் ஹிண்ட்ராப் எழுச்சிக்கும் தொடர்பு இருந்தாலும் இன்று ஹிண்ட்ராப் தேசிய முன்னணியிடம் சரணடைந்து விட்டது போராட்டத்தில் விழுந்த அடியைவிட பேரடியைக் கொடுத்துவிட்டது. அன்று அடி தாங்கியவர்கள் அனைவரும் வேதமூர்த்தி  கொடுத்த அடியால் துடித்துக் கொண்டிருகின்றனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட சீனர்களும், மாற்றத்தை நேரில் சந்திக்கப் புறப்பட்டுவிட்ட மலாய்க்காரர்களும் இன்று இந்தியர்களை நம்புவதா? நம்பலாமா?  என்று பார்க்கத் தொடங்கிவிட்டனர். 2008-இல் தேசிய முன்னணிக்கு வக்களிக்காதீர்கள்,  ம.இ.கா மாண்டோர்கள் தேவையில்லை, அம்னோ அரசாங்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்றெல்லாம் கூறிவந்த ஹிண்ட்ராப், ஐந்தே வருடங்களில் தேசிய முன்னணியின் மடிப்பாலைக் குடிக்கும் கைப்பிள்ளையாக மாறி இன்று தங்களின் நடவடிக்கைகளை நியாயப் படுத்துகின்றனர்.

அவர்களைச் சொல்லி குற்றம் உண்டா? போராடுவதற்கு அவர்கள் என்ன பாரதியா? கப்பலோட்டிய தமிழனா? அல்லது சுபாஷ் சந்திரபோஷா?

மனைவி பிழைகள் கொண்ட சராசரி மனிதன் தானே? சுலபமாக சரணடையச் செய்துவிடலாம். உடளவில் சரணடைந்திருக்கலாம். ஆனால் உணர்வளவில் இன்னும் நாங்கள் சரணடையவில்லை என்று அவர்கள் இருப்பார்கள் என்று நாம் நம்புவோம். நம்பித்தானே வாழ்க்கையை ஓட்டிவிட்டோம்.

எதனையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது குறைவுதானே!

 சேராத சட்டை, இறுக்கமாக பிடிக்கும் சிலுவார், ரப்பர் கயிறு தளர்ந்து விட்ட உள்ளாடை ஆகியவைகளை நம் உடல் ஏற்க மறுக்கும் போதெல்லாம், கந்தையானாலும் கசக்கிக்  கட்டு என்று நம் சிந்தனையை ஆதிக்கம் செலுத்தும் பழமொழிக்கும் மரியாதை கொடுத்து அதிகபட்சமாகவே நம் உடல் ஏற்றுக் கொள்ளதா ஆடைகளை நாம் இதுநாள் வரை அணிந்து வந்திருந்தாலும, யாரும் அதைப்பற்றி கவலை பட்டதாகத் தெரியவில்லை. நமக்காக ஆடைகளை சிபாரிசு செய்யவரும் தரகர்களும் அவர்களின் உள்ளாடைகளை மாற்றினார்களே ஒழிய வேறொன்றும் செய்ததில்லை. மாற்றுவதற்கு எதிர்க்கடையில் நமக்காக சில சலுகைகளும் உயர்மட்ட இலவசப் ஆடைகளும் தர தயாராக இருக்கும் மக்கள் கூட்டணி கடைகளுக்குச் சென்றுதான் வருவோமே?

இந்த கடை சரியாக நம்மை கவனிக்காவிட்டால் அடுத்த கடைக்கு செல்வோம்! ஒரே இடத்தில் மலத்தில் புரண்டு வாழும் உணர்வில்லாத பன்றிக்கு தம் மலம் கூட ருசிதான். அடுத்த தலை அறுப்பு அதுக்கும், அது பெற்று குவித்திருக்கும் பிள்ளைக்கும் என்பதை நினைத்துப்பார்க்க அதற்கு அறிவு கிடையாது.

பசிக்கும் போதெல்லாம் உணவு, விறைக்கும்  போதெல்லாம் உடல் உறவு என்று வாழும் பன்றிக்கும் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?

தான் விரும்பும் பழத்தைக் கொத்தித் திண்ணும் சுதந்திரம் பெற்ற அழகு கிளியாக வாழ  மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு.

உங்களுக்குப் பிடிக்காதவர்களை, அசிங்கப் படுத்தியவர்களை, கேவலமாக பேசியவர்களை, உங்களின் உரிமைகளை மறுத்தவர்களை… அனைவருக்கும் நீங்கள்

மொத்தமாக கொடுக்கப்போகும் பெரிய ஆப்பு மே 5.

3 கருத்துகள் for “மே 5 வாழ்கையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு!

 1. ஸ்ரீவிஜி
  April 29, 2013 at 4:20 am

  அணல் பறக்கும் ஓர் கட்டுரை. நல்ல சிந்தனை மாற்றத்திற்கு உங்களின் இந்த கட்டுரை உதவலாம் நிச்சயமாக. தொடருங்கள்.. இன்னும் சிறிது நாட்களே. நான் பேசும் பார்க்கும் அனைத்து மக்களிடமும் சொல்வது.. பாக்காத்தானுக்கு ஓட்டு போடுங்கள்.

 2. விமலி
  May 3, 2013 at 1:13 pm

  கட்டுரையில் சூடு பறக்கிறது தீர்த்தா. தொடர்ந்து எழுதுங்கள்

 3. தமிழ்மகள்
  August 19, 2013 at 5:06 pm

  இணையத்தில் மட்டுமே சூடு பறக்கும் அளவிற்கு நம்மால் எழுத முடிகிறது… உண்மையை எழுத தமிழ்பத்திரிக்கைகள் ஆதரிப்பதில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...