மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான ‘யாழ்’ சிறுகதைப் போட்டி

000யாழ் பதிப்பகம் திட்டமிட்டபடி 2019-ஆம் ஆண்டு மலேசிய ஆசிரியர்களுக்கான தமிழ் சிறுகதைப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளது. இப்போட்டியின் முன் ஆயத்தமாக கடந்த 18/11/2019 – இல் சிறுகதைப் பட்டறை ஒன்றும் எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை மூலம் நடத்தப்பட்டது. இப்பட்டறையில் பல ஆசிரியர்கள் கலந்து பலன் அடைந்தனர்.

 

‘யாழ்’ சிறுகதைப் போட்டி விதிமுறைகளும் விளக்கங்களும்.

1. யாழ் சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் தற்போது பணியில் இருக்கும் எல்லா ஆசிரியர்களும் பங்கேற்கலாம். தற்சமயம் ஆசிரியர் பயிற்சி கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் ஆசிரியப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பயிற்சி ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.

2. பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், பாலர்ப்பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க முடியாது.

3.இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு வெளியிட்ட ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது.

4. சிறுகதைகளுக்கு பக்க அளவு இல்லை. கதை கரு படைப்பாளியின் சொந்த தேர்வு.

5. கணினியில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் படைப்புகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். Unicode தமிழ் எழுதுருக்களைப்பயன் படுத்துவது வரவேற்கப்படுகிறது.

6. ஆசிரியர்கள் பல படைப்புகளை அனுப்பலாம். ஆனால் ஓர் எழுத்தாளரின் ஒரு படைப்பு மட்டுமே பரிசு பெற தகுதி பெரும்.

7. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்பு முன்னர் அச்சு ஊடகங்களிலோ இணையத்திலோ பிரசுரமாகியிருக்கக் கூடாது.

8.ஆசிரியர்கள்  படைப்பின் அசல்தன்மை குறித்து உறுதி கடிதம் கட்டாயம் இணைக்க. வேண்டும்.

9. விதிமுறை 7 அல்லது 8ஐ மீறும் படைப்புகள் போட்டியில் இருந்து நீக்கப்படும்.

10.கதைகளை 31.1.2019 க்குள் yazlstory@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

11. இப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகளில் அதிகபட்சம் 10 தரமான சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு படைப்பாளிக்கும் 1000 ரிங்கிட் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

12. நீதிபதிகள் முடிவே இறுதியானது.

13. மேல் விபரங்களுக்கு 017-3121079  என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்

9 comments for “மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான ‘யாழ்’ சிறுகதைப் போட்டி

  1. P.Tilagawathy
    November 23, 2018 at 1:00 pm

    வரவேற்கதக்க ஒரு திட்டம்.வாழ்க யாழ் குடும்பம்

  2. Selvamani A/P Padavettan
    November 23, 2018 at 9:33 pm

    இலக்கிய ஆர்வலர்களுக்குச் சிறந்த வாய்ப்பு…மிக்க நன்றி..

  3. Sunthari Mahalingam
    November 26, 2018 at 10:46 pm

    Vaalthukkal

  4. B. Ramzan
    December 31, 2018 at 11:53 pm

    வணக்கம். நான் மதுரையில் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளேன். நான் இப்போட்டியில் பங்கேற்றுக் கொள்ளலாமா?

    • வல்லினம்
      January 1, 2019 at 12:52 am

      தாங்கள் மலேசியரா?

  5. Vila
    January 19, 2019 at 9:57 am

    Vanakam. ￰உறுதி கடிதம் எவ்வாறு இருக்க வேண்டும் ?

    • வல்லினம்
      January 22, 2019 at 12:59 am

      உங்கள் பெயர் மற்றும் அடையாள அட்டை எண்ணை இணைத்து அது உங்கள் சிறுகதைதான் என சுருக்கமாக ஒப்புதல் அனுப்புங்கள். போதுமானது

      • Vila
        January 22, 2019 at 6:08 pm

        மிக்க நன்றி .

  6. Ganapathi
    January 23, 2019 at 9:10 pm

    Vanakam.. pottiyin mudivugal eppoluthu teriyaki varum?

Leave a Reply to வல்லினம் Cancel reply