Category: அறிவிப்பு

வாழும் தமிழ் இலக்கிய விழா: தீரா பெருங்கனவு

2022, நவம்பர் 26 ஆம் திகதி மதியம் இரண்டு இருக்கலாம். சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்திலிருந்து ‘ஜார்ச் டவுன் இலக்கிய விழா’வில் கலந்துகொள்ள ஜெயமோகன், அருண்மொழி நங்கை, ஜி.எஸ்.எஸ்.வி நவின் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு பினாங்கு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தேன். நாற்பது நிமிட பயணம். அந்தப் பயணத்தில்தான் என் மனதில் வைத்திருந்த திட்டமொன்றை ஜெயமோகனிடம் பகிர்ந்துகொண்டேன்.…

முதல் எழுத்து இலக்கிய விழா – இலக்கியப் பட்டறை

மலேசிய கலை இலக்கியச் சூழலில் பல்வேறு தளங்களிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது வல்லினம். மூத்த எழுத்தாளர்களை விருது வழங்கி அங்கீகரிக்கும் அதே சமயத்தில் அவர்களது பங்களிப்பை ஆவணப்படங்கள் வழியாகப் பதிவு செய்தும் வருகிறது. அதே போல சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களை வல்லினம் இதழ் வழியாக வெளியிட்டும் நூல்களைப் பதிப்பித்தும் வருகிறது. இதுதவிர, வல்லினத்தின் முதன்மையான…

Aside

இவ்வாண்டு வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மலேசியக் கல்விச் சூழலில் நவீன இலக்கியத்தை வலுப்படுத்தியதோடு சிறுவர் இலக்கியம் மலேசிய நாட்டில் வளர பங்காற்றியவர் பி. எம். மூர்த்தி அவர்கள். எஸ்.பி.எம் இலக்கிய வளர்ச்சிக்கும் மலேசிய இளையோர் சிறுகதை எழுச்சிக்கும் பி.எம்.மூர்த்தியின் பங்களிப்பு முதன்மையானது. அவர் வாழ்நாள் சேவையைப் போற்றி இவ்விருது வழங்கப்படுகிறது. விருது தொகையாக RM 5000 ரிங்கிட் வழங்கப்படுவதுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட விருது கேடயமும் வழங்கப்படும்.

இளையோர் குறுநாவல் போட்டி

வல்லினம் இலக்கியக் குழு இளையோர் குறுநாவல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளையோரின் வாழ்வைப் புனைவுகள் வழியாகப் பதிவு செய்வதும் அவர்களிடையே எழுத்தார்வத்தை உருவாக்குவதும் இந்தப் போட்டி நடத்தப்படுவதின் அடிப்படை நோக்கங்களாகும். இந்தக் குறுநாவல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை: முதல் பரிசு: RM 1500.00 இரண்டாம் பரிசு: RM 1000.00 மூன்றாம்…

முக்கோண கதைகள்/ Triangle of Tales

அறிவிப்பு காணொளி வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன. இந்த விழாவுக்கு வழக்கறிஞர் பசுபதி அவர்கள் தலைமை தாங்குகிறார். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் தோற்றுனரான அவர் வல்லினம் உள்ளிட்ட…

நூல்களின் முன்பதிவும் நிதி சேகரிப்புத் திட்டமும்

வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் மொழிபெயர்ப்புக்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. மலாய் சீன சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதோடு மலேசிய தமிழ் சிறுகதைகளை மலாய் மொழிக்கு மொழியாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மூன்று நூல்களை ஒரே நேரத்தில் பதிப்பிப்பதுடன் அவற்றை ஒட்டிய கலந்துரையாடல்களை உருவாக்கும் திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தில் ‘தமிழாசியா’ பதிப்பகமும் இணை…

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா இவ்வருடம் வல்லினம் இளம் எழுத்தாளர் விருதினை எழுத்தாளர் அரவின் குமார் பெறுகிறார். இரண்டாயிரம் ரிங்கிட் தொகையோடு நினைவுக்கோப்பையும் இந்த விருதில் வழங்கப்படும். இந்த விருது விழாவினை ஒட்டி கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் குறித்த ஓர் அரங்கு இடம்பெறுகிறது. இதில், ஶ்ரீதர் ரங்கராஜ், கி. இளம்பூரணன், விஜயலட்சுமி…

வல்லினம் இலக்கிய முகாம் 30 நவம்பர் – 1 டிசம்பர்

வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இலக்கிய முகாமை ஜா. ராஜகோபாலன் வழிநடத்துகிறார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் அறியப்பட்டவர். சங்கப்பாடல்கள், பக்திப்பாடல்கள், நவீன கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த இலக்கிய முகாமில் எவ்வாறு ஒரு படைப்பை வாசித்து ஆழமாக அறிவது…

மலேசியாவின் இரு சமகால நாவல்கள்: மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீன் & அ. பாண்டியன்

2023 இல் மலேசியாவில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு நாவல்களான ‘தாரா’ & ‘கரிப்புத் துளிகள்’ குறித்த கலந்துரையாடல். மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீனையும், அ. பாண்டியனையும் நேரில் சந்திக்க வாருங்கள். எழுத்தாளர்கள் குறிப்பு: ம.நவீன் ம.நவீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை…

மலேசியாவில் சௌந்தரின் யோகப் பயிற்சி

சௌந்தர் அவர்கள் தமிழகத்தில் முதன்மையான யோகப்பயிற்சியாளர்களில் ஒருவர். மரபார்ந்த யோகப் பயிற்சிகளை தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார்.  1950ல்  சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்திய மற்றும் இலங்கை பயணம் மேற்கொண்டு முழுமையான யோக கல்வியை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். சௌந்தர் அந்த குரு மரபில் வந்தவர். எனவே அதே அளவு தீவிரத்துடன் அவரின்…

GTLF & வல்லினம் இலக்கிய விழா

GTLF எனப்படும் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா இவ்வாண்டும் அக்குழுவினரால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இலக்கியத்துக்கு இவ்வாண்டும் இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தமிழ் பிரிவுக்கு எழுத்தாளர்   ம. நவீனை GTLF அமைப்பு பொறுப்பாளராக நியமித்துள்ளது. மேலும் வல்லினத்தை…

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா

வல்லினம் மற்றும் யாழ் இணைவில் பரிசளிப்பு விழா ஒன்று மார்ச் 18 இல் நடைப்பெற உள்ளது. கடந்த ஆண்டு வல்லினம் குழுமம் அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதை போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்தது. அதே சமயம் யாழ் பதிப்பகம் மூலம் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை போட்டி ஒன்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டது. எழுத்தாளர் ம.நவீன், அ.பாண்டியன்,…

வல்லினம் 150 

வல்லினம் கடந்த காலங்களில் இலக்கியம், பண்பாடு, வரலாறு, ஆய்வு, நேர்காணல் போன்றவற்றை உள்ளடக்கிய களஞ்சியங்களை வெளியிட்டுள்ளது. 2010இல் ‘மலேசிய சிங்கப்பூர் 2010’ என்ற தொகுப்பும் 2017இல் ‘வல்லினம் 100’ என்ற தொகுப்பும் வல்லினம் வெளியீட்டில் வெளிவந்தன.  இதனைத் தொடர்ந்து ‘வல்லினம் 150’ எனும் பெருந்தொகுப்பு வல்லினம் தயாரிப்பில் வெளிவர உள்ளது. இந்தத் தொகுப்பில் மலேசியா மற்றும்…

GTLF & வல்லினம் இலக்கிய விழா நிரல்

25.11.2022 (வெள்ளிக்கிழமை) இடம் : பிரம்ம வித்யாரண்யம் (சுங்கை கோப், கெடா) மாலை மணி 4.00: தேனீர் உபசரிப்பு மாலை மணி 5.00: தமிழ் விக்கி அறிமுகவிழா இரவு மணி 7.00 : ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகப் பகுதிகள் அரங்கேற்றம் இரவு மணி 8.30 : இரவு உணவு 26.11.2022 (சனிக்கிழமை) இடம் : பிரம்ம…

வல்லினம் & GTLF இணைவில் மாபெரும் இலக்கிய விழா

இம்மாத இதழ், வல்லினம் மற்றும் ஜார்ச் டவுன் இலக்கிய விழா குழுமத்தின் இணைவில் நடைபெற உள்ள மாபெரும் இலக்கிய விழாவின் சிறப்பிதழாக மலர்கிறது. இலக்கிய விழா தகவல்களோடு அதில் பங்கெடுக்கும் இலக்கிய ஆளுமைகள் குறித்த விரிவான கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. உலகில் தலைசிறந்த இலக்கிய விழாக்களில் ஒன்றான ஜார்ச் டவுன் இலக்கிய விழாவில் வல்லினமும் ஒரு…