மலேசியாவின் இரு சமகால நாவல்கள்: மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீன் & அ. பாண்டியன்

2023 இல் மலேசியாவில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு நாவல்களான ‘தாரா’ & ‘கரிப்புத் துளிகள்’ குறித்த கலந்துரையாடல். மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீனையும், அ. பாண்டியனையும் நேரில் சந்திக்க வாருங்கள்.

எழுத்தாளர்கள் குறிப்பு:

ம.நவீன்

ம.நவீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை தொகுப்புகள், இரண்டு விமர்சன நூல்கள், ஒரு நேர்காணல் தொகுப்பு நூல், ஐந்து கட்டுரை நூல்கள் என தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கி வருகிறார். 15க்கும் மேற்பட்ட மலேசிய சிங்கப்பூர் ஆளுமைகளை ஆவணப்படம் இயக்கியுள்ளார். வல்லினம் எனும் இணைய இலக்கிய இதழை பதினேழு ஆண்டுகளாக நடத்தி வரும் ம.நவீன் ஏராளமான இலக்கிய முகாம்கள், இலக்கிய விழாக்களை நடத்தியுள்ளார்.

அ.பாண்டியன்

அ.பாண்டியன், மலேசியாவில், பினாங்கு மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். வயது 54. தொழில், ஆசிரியர்.  2010 முதல் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகிறார். வல்லினம் இலக்கிய குழுவின் வழி பல்வேறு இலக்கிய செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். நாளிதழ்களிலும் வல்லினம் இணைய இதழிலும் இவரின் கட்டுரைகளும் சிறுகதைகளும் வெளிவந்துள்ளன.  மலேசியாவின் பன்முக பண்பாட்டையும் வரலாற்றையும் தன் படைப்புகளில் வெளிக்காட்டுவதில் ஆர்வம் உள்ளவர். இதுவரை மூன்று இலக்கிய விமர்சன நூல்களையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். 2018 – ரிங்கிட் நாவலும் 2023-ல் கரிப்புத்துளிகள் நாவலும் வெளிவந்துள்ளன.

நுழைவு இலவசம்

பதிவுக்குள் https://go.gov.sg/contemporarynovelsofmalaysia

நிகழ்ச்சி குறித்த விபரங்கள்:

திகதி: 28.1.2024, (ஞாயிறு)

நேரம்ள் 4.30pm – 7pm

இடம்: Room 2, Level B1

Central Public Library

National Library Building

100 Victoria Street

Singapore 188064

(nearest MRT Bugis)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...