GTLF & வல்லினம் இலக்கிய விழா

GTLF எனப்படும் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா இவ்வாண்டும் அக்குழுவினரால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இலக்கியத்துக்கு இவ்வாண்டும் இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தமிழ் பிரிவுக்கு எழுத்தாளர்   ம. நவீனை GTLF அமைப்பு பொறுப்பாளராக நியமித்துள்ளது. மேலும் வல்லினத்தை இவ்விழாவின் இணை இயக்கமாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வல்லினம் குழுமம் இரண்டு இலக்கிய கலந்துரையாடல்களை நவம்பர் 25 – 26 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் முதல் அரங்கில் எழுத்தாளர்கள் சிவானந்தன் நீலகண்டம், அரவின் குமார், அபிராமி கணேசன் ஆகியோரும் இரண்டாவது அரங்கில் தமிழக எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களும் பங்கெடுக்க உள்ளனர். இரண்டு நிகழ்ச்சிகளையும் முறையே அ. பாண்டியன் மற்றும் ம. நவீன் வழிநடத்துவர்.

இவை தவிர  யுவன் சந்திரசேகருடன் தனிப்பட்ட கலந்துரையாடல்களும் இரண்டு நூல் வெளியீடுகளும் நிகழ்த்த வல்லினம் திட்டமிட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்காகக் கோலாலம்பூர், ஈப்போ ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகளையும் வல்லினம் ஏற்பாடு செய்துள்ளது. கூலிம், சுங்கை கோப்பில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் வல்லினம் செய்து வருகிறது.

நிகழ்ச்சிகளில் நேரடியாகவே இலக்கிய வாசகர்கள் பங்கெடுக்கலாம். எனினும் தனிப்பட்ட சந்திப்புகள் குறித்த விபரங்களையும் அவ்வப்போதைய நிகழ்ச்சி குறித்த மேல் தகவல்களையும் அறிய முன்பதிவு அவசியம்.

அனைத்து விபரங்களுக்கும் : ம.நவீன் 0163194522

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி

ஜார்ச் டவுன் இலக்கிய விழா

2 comments for “GTLF & வல்லினம் இலக்கிய விழா

  1. Mohana Ravindra
    July 23, 2023 at 6:30 pm

    வணக்கம். உங்கள் இதழில் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? பத்திரிகையாளர் பிண்ணனி இல்லாமல் இருப்பவர்கள் எழுதலாமா?

    • வல்லினம்
      February 25, 2024 at 11:18 am

      யாரும் எழுதலாம். நன்றி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...