
வல்லினம் இலக்கியக் குழு இளையோர் குறுநாவல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளையோரின் வாழ்வைப் புனைவுகள் வழியாகப் பதிவு செய்வதும் அவர்களிடையே எழுத்தார்வத்தை உருவாக்குவதும் இந்தப் போட்டி நடத்தப்படுவதின் அடிப்படை நோக்கங்களாகும்.
இந்தக் குறுநாவல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை:
- முதல் பரிசு: RM 1500.00
- இரண்டாம் பரிசு: RM 1000.00
- மூன்றாம் பரிசு: RM 500.00
குறுநாவல்கள் அக்டோபர் 31க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
குறுநாவல் வடிவம்
இளையோர் (Teen age) வாழ்க்கையே குறுநாவலில் இடம்பெற வேண்டும். அவர்களின் மொழி, உரையாடல்கள், மன ஓட்டங்கள் குறுநாவலில் பதிவாவது அவசியம். பள்ளி, கல்லூரி போன்றவை கதைக்களமாக இருப்பது வரவேற்கப்படுகிறது. கல்வி, குடும்பம், நட்பு, காதல், விளையாட்டுத்துறை, தனிமனித உறவு, பல்லின பண்பாட்டு வாழ்க்கைமுறை என பலதரப்பட்ட கருப்பொருளைக் குறுநாவலில் உட்படுத்தலாம்.
போட்டியின் விதிமுறைகள்
அ. மலேசியாவில் உள்ள ஆறாம் படிவம், மெட்டிரிகுலேசன், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழகங்கள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் இப்போட்டியில் பங்கு பெறலாம்.
ஆ. குறுநாவல் 4000 சொற்களுக்குக் குறையாமல் அமைய வேண்டும் (ஏறக்குறைய 15 முதல் 20 பக்கங்கள்).
இ. போட்டியில் பங்கெடுக்கும் படைப்புகள் உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். இணையத்தில் இருந்தோ பிற நூல்களிலிருந்தோ எடுக்கப்பட்ட படைப்புகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். போட்டி முடிவுக்குப் பிறகும் படைப்புகளின் நம்பகத்தன்மை குறித்த புகார்கள் கிடைக்கப் பெற்றால் பரிசுகள் மீட்டுக் கொள்ளப்படும்.
ஈ. கணினியில் எரியல் யுனிகோர்ட் (Arial Unicode) எழுத்துருக்களில் குறுநாவல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
உ. கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு பி.டி.எஃப் (pdf) வடிவத்தில் அனுப்பப்படும் குறுநாவல்களே போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும்.
ஊ. நாவல்களை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்: novelletecontest@gmail.com
குறுநாவல் போட்டியில் பங்கெடுப்போர் விபரங்கள்
அ. மலேசியாவில் உள்ள ஆறாம் படிவம், மெட்டிரிகுலேசன், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழகங்கள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மலேசிய மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் பங்கெடுக்கலாம்.
ஆ. 2025ஆம் ஆண்டில், 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இ. முழு பெயர், அடையாள அட்டை எண், கல்லூரி பெயர், கைப்பேசி எண் ஆகிய நான்கு விபரங்கள் இல்லாத போட்டியாளரின் படைப்புகள் பரிசீலிக்கப்படாது.
போட்டிக்குக் குறுநாவல் எழுதும் முன்னர் செய்ய வேண்டியவை.
அ. கீழே உள்ள கூகுள் பார இணைப்பில் உங்களின் முழு விபரங்களை ஜூலை 10ஆம் திகதிக்குள் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
https://forms.gle/EAvJkoTFjwUG5eA18
ஆ. பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இணையம் வழியான கூடுதல் விளக்கங்கள் வழங்கப்படும்.
இ. வழங்கப்பட்ட விளக்கங்கள், எளிய பயிற்சிகளுக்குப் பின் குறுநாவல்களை எழுதி அனுப்பலாம்.
போட்டிக்கு நாவலை அனுப்பியப்பின் செய்யக்கூடாதவை
அ. பரிசளிப்பு நடக்கும் வரை நாவலை வேறு எந்தப் போட்டிக்கோ இதழ்களுக்கோ பதிப்பகத்துக்கோ அனுப்பக் கூடாது.
ஆ. போட்டிக்கு அனுப்பப்பட்ட குறுநாவல்கள் வல்லினம் பதிப்பகத்திற்குச் சொந்தமானவை. வெற்றி பெற்ற குறுநாவல்களை வல்லினமே பதிப்பிக்கும். தேர்வு பெறாத நாவல்கள் எழுத்தாளர்களுக்குச் சொந்தமானவை.
இ. போட்டிக்கு நாவலை அனுப்பிய எழுத்தாளர்கள் பரிசு விபரங்கள் தொடர்பாக வல்லினம் குழுவினரைத் தொடர்புக்கொள்ளக் கூடாது.
ஈ. போட்டி தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் +601123822472 எனும் புலன எண்ணுக்குக் கேள்விகளை அனுப்பலாம். உங்கள் கேள்விக்கான பதில்கள் 24 மணி நேரத்தில் வழங்கப்படும்.
ஆலோசகர்கள்: முனைவர் மு. மணியரசன், முனைவர் சி, இளங்குமரன்
போட்டி ஏற்பாடு: வல்லினம் இலக்கியக் குழு