
வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் மொழிபெயர்ப்புக்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. மலாய் சீன சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதோடு மலேசிய தமிழ் சிறுகதைகளை மலாய் மொழிக்கு மொழியாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மூன்று நூல்களை ஒரே நேரத்தில் பதிப்பிப்பதுடன் அவற்றை ஒட்டிய கலந்துரையாடல்களை உருவாக்கும் திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தில் ‘தமிழாசியா’ பதிப்பகமும் இணை இயக்கமாகச் செயல்படும்.
இந்தத் திட்டத்தில் பதிப்பிக்கப்படவுள்ள மூன்று நூல்கள்:
1. எஸ். எம். ஷாகீர் சிறுகதைகள் (மலாய் சிறுகதைகள் தொகுப்பு)
2. சீன எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு
3. மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை தொகுப்பு
இந்த மூன்று சிறுகதை நூல்களைப் பதிப்பிக்கவும் வெளியீடு, கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் நிதி பலம் அவசியமாக உள்ளது. எனவே முன்பதிவு திட்டத்தின் வழியாகவும் நிதிவசூலிப்பு வழியாகவும் இத்திட்டத்தை வெற்றிகரமாக்க முடிவுசெய்துள்ளோம்.
இந்தத் திட்டம் இக்காலக்கட்டத்தின் தேவை. மலேசியாவில் எழுதப்படும் பல்வேறு மொழி இலக்கியங்கள் குறித்த உரையாடலை உருவாக்கும் முயற்சி இது. எனவே, வாசகர்களும் எழுத்தாளர்களும் பின்வரும் வழிகளில் வல்லினத்தின் இந்த இலக்கிய முயற்சி முழுமைபெற உடன் வரலாம்.
1. மூன்று நூல்களின் முன்பதிவு தொகை RM 100.00 ரிங்கிட். முன்பதிவுக்கான தொகையைச் செலுத்த வேண்டிய இறுதி நாள்: 30. 4. 2025. (முன் பதிவு திட்டத்தில் பங்கெடுத்தவர்களின் பெயர்கள் நூலில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும்.)
2. நிதி வழங்கலாம்: வாசகர்களும் எழுத்தாளர்களும் நிகழ்ச்சிக்குத் தேவையான நிதியை தனிநபராகவோ இயக்கம் சார்ந்தோ வழங்கலாம்.
பின்வரும் வங்கி கணக்கில் முன்பதிவுக்கான தொகையையோ நிதி தொகையையோ செலுத்தலாம்.
வங்கி எண்: 512400550559
வங்கி: Maybank
Swift Code: MBBEMYKL (வெளிநாட்டில் உள்ளவர்களுக்காக)
வங்கி கிளை முகவரி: Maybank (Taman Sri Gombak) Branch, 11-13, Jalan SG 3/14, Taman Sri Gombak, 68100 Batu Caves, Selangor
(பணம் செலுத்திய தகவலை 0163194522 என்ற புலனத்தில் அனுப்பவும்.)
மலேசிய இலக்கியத்தை ஆழ்ந்து அறிவதோடு தமிழ் இலக்கியத்தை பரவலான வாசிப்பிற்கு கொண்டு செல்ல இந்த நூல் பதிப்பு முயற்சியையும் கலந்துரையாடல்களையும் முன்னெடுக்க வாசகர்களின் பங்களிப்பும் முக்கியமானது. மலேசியாவில் இத்தகைய பெருந்திட்டங்கள் நிகழ்வதன் வழியாகவே இலக்கியச் சூழலை ஆரோக்கியமான தடத்தில் தொடர்ந்து நகர்த்திச் செல்ல இயலும்.
நன்றி
வல்லினம் இலக்கியக் குழு