· அறிவியல் சிறுகதை போட்டி ஏற்பாட்டு குழுவினரும் அவர்தம் குடும்பத்தாரும் இந்தப் போட்டியில் பங்கெடுக்க முடியாது.
· மற்றபடி போட்டியில் மலேசியப் பிரஜைகள், வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம்.
· போட்டியில் பங்கு பெறும் கதைகள் பக்க வரையறைக்கோ சொற்களுக்கோ கட்டுப்பட்டதல்ல.
· ஒருவர் எத்தனை சிறுகதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
· அறிவியல் கூறுகள் இருந்தால் மட்டுமே போட்டியில் கதைகள் இணைத்துக் கொள்ளப்படும். புனைவில் அறிவியல் கூறுகள் என்பது குறித்த தெளிவுகள் இந்த யூடியூப் காணொலியில் உள்ளது.
· கதைகளை கணினியிலோ கையெழுத்தாகவோ எழுதலாம். ஆனால் மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி: vallinamariviyal@gmail.com
· சிறுகதை போட்டியின் முடிவு பரிசளிப்பு விழாவின் போது நடுவர்களால் அறிவிக்கப்படும். அதுவரை ஏற்பாட்டாளர்களை போட்டி முடிவு தொடர்பாக அழைக்கக் கூடாது.
· போட்டியில் வென்ற கதைகள் வல்லினத்தில் பிரசுரிக்கப்படும்.
· பரிசு பெறும் சிறுகதைகளை அச்சு வடிவிலும் கிண்டில் புத்தகமாகவும் பதிப்பிக்கும் உரிமை வல்லினம் பதிப்பகத்திற்கு உண்டு. இதற்காக எவ்வித உரிமத்தொகையும் எழுத்தாளருக்கு வழங்கப்படாது.
· எழுத்தாளர்கள் தங்கள் சொந்த சிறுகதை தொகுப்புகளில் போட்டியில் வென்ற கதையை இணைத்துக்கொள்ளத் தடையில்லை.
· போட்டிக்கான சிறுகதையைத் தனியாகவும் எழுத்தாளரின் விபரங்களை தனியாகவும் எழுதி ஒரே கோப்பில் அனுப்ப வேண்டும். சிறுகதையின் முன்னோ பின்னோ எழுத்தாளரின் விபரங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளவும்.
· ஆசிரியர் பற்றிய குறிப்புகளுடன் உறுதிக்கடிதமும் தனி கோப்பாக இணைத்து அதே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
· அனுப்பப்படும் சிறுகதை படைப்பாளரின் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்.
· அனுப்பப்படும் சிறுகதை தழுவலாகவோ மொழிப்பெயர்ப்பாகவோ ஏற்கனவே பிரசுரம் கண்டதாகவோ இருந்தால் உடனடியாக போட்டியில் இருந்து நீக்கப்படும்.
· போட்டிக்கு அனுப்பபட்ட சிறுகதை எழுத்தாளரின் சுய படைப்பு என்ற குறிப்புடன் கையொப்பம் இடப்பட்ட உறுதிக்கடிதம் கட்டாயம் அனுப்பப்படவேண்டும்.
· ஜூன் 30 க்குள் அனுப்பப்பட்ட கதைகளே போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படும்.
· நீதிபதிகளின் முடிவே இறுதியானது.