யாழ் சிறுகதை போட்டி

அ. யாழ் நிறுவனத்தின்  இச்சிறுகதைப் போட்டியில் மலேசியாவில் உள்ள அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் அல்லது உயர்நிலைப் பள்ளிகளில்  இவ்வாண்டு படிவம் 4,5,6 -ல் (17 வயது முதல் 20 வயது வரை)  பயிலும் மாணவர்கள் பங்கெடுக்கலாம்.

ஆ. யாழ் நிறுவனம் வழிநடத்திய பட்டறையில் பங்கெடுத்து பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தப் போட்டில் பங்குபெற முடியும். 

இ. இந்தப்போட்டி இரண்டு சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் சிறந்த 30 கதைகள் தேர்வுசெய்யப்படும். முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 கதைகளின் எழுத்தாளர்கள் (30  மாணவர்கள் மட்டும்) இரண்டாவது சுற்றில் கலந்து கொள்வர். இரண்டாவது சுற்றில்  வெற்றி பெரும் சிறந்த கதைகளே பரிசு பெறும். 

ஈ. சிறுகதைப் போட்டியில் பங்கெடுக்க விரும்பும் மாணவர்கள் நேரலையாக நடத்தப்பட்ட பட்டறையை இந்தப் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பார்க்கலாம். காணொலி

உ. முதல் சுற்றில் தேர்தெடுக்கப்படும் 30 சிறுகதைகளின் எழுத்தாளர்களுக்கு ஒரு நாள்பட்டறை நடத்தப்படும். அதன்பிறகே இறுதிச்சுற்று போட்டி நடத்தப்படும். 

ஊ. போட்டியில் பங்கேற்கும் எல்லா மாணவர்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும். 

எ. வழங்கப்படும் கருப்பொருளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சிறுகதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

– இயற்கை / சுற்றுச்சூழல்

– தொழில்நுட்பமும் இளையோரும்

– உளவியல்

– தலைமுறை இடைவெளி

– அமானுஷ்யம்

– குடும்பமும் உறவுகளும்

ஏ. சிறுகயை 300 – 500 சொற்களுக்குள் அமைந்திருத்தல் நலம்.

ஐ. முதல் சுற்று போட்டிக்கான கதைகள் 31.5.2022 க்குள் அனுப்பப்பட வேண்டும்.

ஒ. எல்லா சிறுகதைகளும் 12 அளவு எழுத்துருவில் டைப் செய்யப்பட்டு பி.டி.எப் முறையில் அனுப்பப்பட வேண்டும். கையெழுத்து பிரதியாக இருந்தாலும் பி.டி.எப் முறையில் அனுப்பப்பட வேண்டும்.

ஓ. கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :  yaazhsirukathai@gmail.com

ஔ. நடுவர்களின் முடிவே இறுதியானது.

அனைத்துத் தொடர்புக்கும்: ம.நவீன் 0163194522 & கி. இளம்பூரணன் 0129780479

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...