Author: அன்பு வேந்தன்

கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (பெயர் வழி அறிதல்)

வரலாற்றின் பொருளைக் காண்பதில் இருவிதச் சிந்தனைப் போக்குகள் இருக்கின்றன. தற்காலத் தேவைகளை கடந்த காலத்தில் காண முயல்வதும், பழங்காலத்தின் படிமத்தைத் தற்காலத்தின்மீது பதிக்க முயல்வதும் அவ்விரு போக்குகளாகும். – ரொமீலா தாப்பர் கீழடி அகழாய்வு பற்றிய அறிமுகக் கட்டுரையினைக் கடந்த இதழில் எழுதியிருந்தேன். கீழடி அகழாய்வினை இந்திய அரசு தாமதப்படுத்துவதாகவும், புறக்கணிப்பதாகவும், உள்நோக்கத்துடன் அகழாய்வின் கண்காணிப்பாளர்…

கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (சில குறிப்புகள்)

மதுரையிலிருந்து தென்கிழக்கில் 13 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கீழடி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அவ்வூரானது வைகையாற்றின் தென்கரையிலிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. கீழடியில் உள்ள  ‘பள்ளிச்சந்தை திடல்’ என்னும் பகுதியில் இந்தியத்தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவின் ஆறாவது கிளை 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வானது வரலாற்று முக்கியத்துவம்…

பிறக்கவிருப்பவள்

வனம் என்னை அழைத்தது ஆயிரம் பூக்களின் நறுமணங்களுடன்   எனது குருதிநாளங்களில் இப்பொழுதுமுண்டு யட்சிகளினுடையதைப்போன்ற அருவிகளின் பெருஞ்சிரிப்பு   எனது இளமையை இவ்வனங்களுக்கும் எனது இதயத்தை அநாதரவாகித் துயருறுவோரின் வேதனைகளுக்கும் கையளித்தேன்   எனது கால்களில் இப்பொழுதுமுண்டு குன்றுகளில் ஓடித்திரிந்த கொலுசுகள் அணிந்திராத சிறுபருவம் எனது தலைக்குள் ஓடைகளில் குதித்தாடிய காதலற்ற இளம்பருவம்   இந்த…

அன்புவேந்தன் கவிதைகள்

அன்பின் வழி அது   நமது அன்பின் பெரும்பொழுது எல்லையற்று விரியும் இப்பெருநிலத்தின் உயிர்க்கூட்டங்களின் மேல் பிரபைகளைப் பொழிந்தபடி நட்சத்திரங்களில் சிமிட்டிக்கொண்டிருக்க நாம் அப்போதுதான் ஒரு முத்தம் பகிரத் தொடங்கியிருந்தோம்.   தடங்களைத் தளர்த்தியபடி நெகிழ்ந்த புலன்கள் பாவி சிகரங்களையும் சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சுழித்துத் திளைக்கும் நமது அன்பின் நீர்மத்தில் மிதந்தபடி ஒரு புணர்தலைத் தொடங்கியிருந்தோம்…