
குளிர் காதுகளை அடைத்தது. இன்னும் சூரியன் வெளிச்சம் காட்டவில்லை. பேருந்து மெதுவாக பச்சை மலை குன்றுகள் சிதறிக்கிடக்கும் பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. மரவட்டை நகர்வது மாதிரி நிலம் மெதுமெதுவாக மேடேறும் பாதை. ஒக்கரை குன்றடி சிற்பக்கூடங்களில் உளிகளின் சத்தங்கள் கலைந்து கேட்கிறது. “ஒக்கரை வந்துருச்சு…” என்று நடத்துனர் உறங்குபவர்களை எழுப்பினார். அருகில் உறங்கிக்கொண்டிருந்த பிரதிக்ஷாவை சேலை…


