Author: சௌந்தர்

பொன்னார் மேனியன்

தீவிரமாக செய்யப்படும் எந்த ஒரு செயலும் ஆன்மீக அனுபவத்திற்கு மிக அணுக்கமான ஒன்றாகவே இருக்க முடியும். இதில் முதன்மையானது பயணம் அல்லது ஆன்மீக நோக்கம் கொண்ட யாத்திரைகளைக் குறிப்பிடலாம்.  இவ்வகை யாத்திரைகளின் நோக்கம் ஒன்றே. அது ‘சுத்திகரிப்பு’ எனும் ஆழமான செயல்.   உடலாலோ  உள்ளத்தாலோ அல்ல, மேலும் உள்ளே சென்று நிகழும் ‘சித்த சுத்தி’ என்கிறது…

பேய்ச்சி: பிரளயமும், ஆனந்த சயனமும்

நமது புராணங்களில்  வரும் உருவகங்கள், படிமங்கள், எப்போதும் நம்மை நிலைக்குலையவும், நிலைபெறவும்  செய்பவை. அன்றாட செயல்பாடுகளினூடாக, இன்றும் நம்மை சுற்றி சூழ்ந்துள்ளவை.  நம் அறையில் தொங்கிக்கொண்டிருக்கும், காலண்டரிலும், வீதிகளின்  விளம்பரங்களிலும், மக்கள் நாவில் எழுந்து வந்து செல்லும், வார்த்தைகள் ஊடாகவும் என எண்ணிலடங்கா  உருவக வெளி அது. அப்படி ஒரு திகைப்பையும், நிறைவையும் தரும் இரண்டு…