Author: பிரானா

யானும் அவ்வண்ணமே கோரும்

“என்னைவிட நல்லவன் யாருமில்லை,” என்றேன். இதை ஏன் நானே சொல்கிறேன்? என்னைவிட்டால் வேறு யார் என்னை நல்லவன் என்று சொல்லமுடியும்? அண்ணனைத் தவிர. எனக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயத்தை மூன்று முறைக்கு மேல் கேட்டால் நானே உண்மையைச் சொல்லி விடுவேன். ஆழ்மனதில் சென்றோ அல்லது அடித்தோ கேட்க வேண்டிய அவசியமில்லை.…

வெண்ண புட்டு

‘ஏன்மா… நவுறு. பொண்ணு, மருமயன், பேத்திலாம் வந்துருக்காங்க பாரு. வழிவுடு’ ‘சுபத்துரா, அம்மாவ பாத்தியலா…’ ‘காசிக்கு அந்தப்புரம் காசரளி பூந்தோட்டம், நாங்க கண்டா வருவோமுன்னு கதவடச்சி போனியோ, சைஞ்சிக்கு அந்தப்புரம் செவ்வரளி பூந்தோட்டம், நாங்க தெரிஞ்சா வருவோமுன்னு செடிதாப்பா போட்டியோ…’ என்று சின்னதங்கச்சி பாடிக்கொண்டிருந்தாள். ‘ஆயாவ, வாயாமுடி வெளியகொண்டு போய் உட்காரவை’ ‘நல்ல மனுசி… எடுக்க,…