அங்கு ஒன்றாக சென்று கொண்டிருந்தோம். நானும் நடேசனும். நிறைந்த நிலவு. சீவிடுகளின் சத்தம். எப்பொழுதும் போல ஊரும் கரம்பையும் வேறு வேறாவதன் அதிசயத்தை அப்பொழுதும் புதியதென உணர்ந்தேன். இரவுகளில் இந்த வேறுபாடு இன்னும் கூடுதலாக தெரிகிறது. விளக்குகள் அனைந்து ஊரே உறங்குவது போலவும் வயல்வெளி எதையோ நோக்கி திறந்திருப்பது போலவும் உள்ளது. வானத்திலிருந்து பறவைகள் கிளைக்கு…
Author: பிரதீப் கென்னடி
உயிர்மரம்
1 பூத்த மலர் சொரியும் பூவனத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லாம் குழந்தைகளும் சிறார் சிறுமிகளும். சிதறும் நெல்மணி கொத்தும் பறவைகள் என ஓசை. அங்கு அவர்கள் யாருக்கும் பெயரில்லை, பெயர் வைக்கும் வழக்கமும் அப்பொழுதில்லை. பெரிய உடல் கொண்டிருந்தவர்கள், விளையாடும் அக்குழந்தைகளை குட்டித் திரளாகவே பார்த்தனர். மக்கள் தங்களையும் திரளாகவே உணர்ந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும்…