
1 கரட்டுப்பட்டியின் முதல் மூன்று குடும்பங்களில் ஒன்று ராமசாமிப் பத்தருடையது. அப்படித்தான் அப்பா சொன்னார். மற்ற இரண்டு, செல்லமுத்துப் பூசாரி குடும்பமும், காவல்கார மூக்கையா மாமாவுடையதும். ஆவலாகக் கதைகேட்கும் பிராயம் எனக்கு. ஆதாரங்களெல்லாம் கேட்கத் தெரியாது. ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படும் வரலாற்றுச் செய்திகளே நம்பத்தக்கவை அல்ல என்று சொல்கிறவர்களும் உண்டு, அல்லவா! முதல் வாக்கியத்தை என்னிடம் சொல்லவில்லை…