
நாச்சியாவிற்கு ஒரு கணம் நெஞ்சு அடைத்துவிட்டது. உணவகத்தின் பின்புறச் சமையல் கூடத்தில், மிளகாய் தூளை அள்ளிப் போட்டு நறுக்கியக் கோழித்துண்டுகளை அலுமினிய அகப்பையால் கிண்டிக் கொண்டிருந்தவளின் கைகள் சட்டென பிடியை விட்டன. முக்காடாக வேயப்பட்டிருந்தச் சேலைத்தலைப்பையை வாயில் பொத்தி, “யா ரஃபி, என்ன கொடுமையிது!” வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாதமாக வந்து நின்ற அவளைப் பார்க்கும்போது…