ஒரு பொருள் அல்லது கருத்தியலை நம் ஆய்வுக்குரியதாக ஏற்று அதுபற்றிய முந்தைய கருத்து மற்றும் முடிபுகளை தொகுத்தெடுத்து, இனியும் ஏற்க கூடியதை ஏற்று, தகர்க்கக் கூடியதை தகர்த்து, தொகுத்த தகவல்களைக் கட்டுரையாக வகை தொகைப்படுத்தி படைக்கும்போது அது ஆய்வுக்கட்டுரையாக உருப்பெறுகிறது என்கிறார் முனைவர் ந.ரெங்கநாதன் இ.செ.ப (தகவல் தொடர்பியல் துறை பற்றிய ஆய்வு அனுபவம், தமிழில்…
Author: நவீன் செல்வங்கலை
பழங்குடிகள்: மூடப்படவிருக்கும் முகங்கள்
பெரும்பாலோரின் பார்வையில் நாகரிகமற்றவர்களாகவும் அசுத்தப் போக்கைக் கொண்டவர்களாகவும் பழங்குடியினர் வரையறுக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக் காட்டியே நகர வாழ் மக்கள் இவர்களை வன்மையாக ஒதுக்குவதுண்டு. இடைப்பட்ட காலத்தில் மலேசிய பழங்குடியினரைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க முற்பட்டேன். அவர்களுடனான தொடர்பை மீட்டெடுக்கும் போக்கில் கேமரன் மலைப் பகுதியில் (பகாங்) வாழும் பழங்குடியினர் கிராமமான ‘கம்போங் பன்கான்’ வாழிடத்திற்கு செல்லும்…
தமிழர் அறிவியலும் சில சந்தேகங்களும்
தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் விரித்துரைக்கப்பட்ட கதைகள் என வரையறுத்துக் கூறுவர். காலங்களைக் கடந்து அவை எல்லா சமூகங்களிலும் தொடரப்பட்டு வருவது கண்கூடான ஒன்று. எச்சமயத்தைச் சார்ந்ததாக இருப்பினும் இக்கதைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளானது விண்ணுலகம் மற்றும் மண்ணுலகைச் சார்ந்தவையாக பெரும்பாலும் இருக்கும். விண்ணுலக கதைகள் பெருவாறாக கற்பனைக் கதைகள் எனக் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகம் சார்ந்த…