குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று இனிவரும் வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும் இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும் அந்தக் கணங்களில் அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும் கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப் போகுமோ…
Author: நெற்கொழு தாசன்
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்: ஒரு பார்வை
ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து, உணர்ச்சிகளால் ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில் ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட…