
அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி? வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்தச் சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்? பொம்மலாட்டப் பாவையைப்போல் ஒருவர்…