
டான்ஶ்ரீ என்னைச் சந்திக்க குவாலா கிராய்க்கு வரும்படி அழைத்திருந்தார். அவருடைய தனி எலிகப்டரில் வந்து அன்றே திரும்பிவிடலாம் என்றார். நான் அதை அன்போடு மறுத்து நானே காரில் புறப்பட்டு வருவதாகச் சொன்னேன். அவர் தயங்கி, வேண்டுமானால் காரும் டிரைவரும் ஏற்பாடு செய்வதாக வற்புறுத்தியபோதும் நான் தனியாகவே புறப்பட்டு வருவதாகச் சொன்னேன். அவர் தயக்கத்தோடு சம்மதித்தார். பிற்பகல்…