Category: அறிவிப்பு

சிறுகதை எழுதும் கலை

வல்லினம் மற்றும் தமிழாசியா இணைவில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து இலக்கிய வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வகையில் இம்மாதம் (10.7.2021) சனிக்கிழமை அ.பாண்டியன் மற்றும் ஶ்ரீகாந்தன் ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள் குறித்த விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்துக்கொண்டவர்களுக்கு அவர்கள் வாசித்து…

சிங்கப்பூர் சிறப்பிதழ்

ஜூலை வல்லினம் இதழை சிங்கப்பூர் சிறப்பிதழாக தயார் செய்கிறோம். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதழுக்கு பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம். சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க புனைவுகள் குறித்து பிற நாட்டு படைப்பாளிகளும் கட்டுரைகள் அனுப்பலாம். படைப்புகளை 20.6.2021 க்குள் valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

வல்லினம் செயலி

இலக்கிய இணைய இதழ்களில் வல்லினம் முதன் முறையாகச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாசகர்கள் இதை கைபேசியில் நிறுவிக்கொண்டால் வல்லினம் அதில் தானாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அச்செய்தியையும் அறிவிக்கும். வல்லினத்தின் அத்தனை பகுதிகளையும் படிக்கவும் முடியும். தரவிறக்க https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp

2020இன் இறுதியில்…

இவ்வாண்டின் இறுதி இதழ் இது. வல்லினத்தின் 126ஆவது இதழ். சமகால நாவல்களின் சிறப்பிதழாக வெளிவருவது அதன் கூடுதல் சிறப்பு. இணையம் வழி இலக்கிய இதழை வழி நடத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் உள்ளன. முதலாவது, படைப்பாளர்களின் மனநிலை சார்ந்தது. ‘இணைய இதழ்தானே…’ எனும் எளிமைப்படுத்திக்கொள்ளும் மனப்போக்கு. அடுத்ததாக இதழாசிரியர்களின் மனநிலை. கிடைத்ததை கொண்டு நிரப்பி வெளியிட்டால்…

ம.நவீனின் 3 நூல்கள் முன்பதிவு

ம.நவீனுடைய மூன்று நூல்கள் வல்லினம் மற்றும் யாவரும் கூட்டு முயற்சியில் இவ்வருடம் வெளிவருகிறது. மூன்று நூல்களின் விபரம்: 1.உச்சை சிறுகதை தொகுப்பு – 2020இல் ம.நவீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. மண்டை ஓடி, போயாக் ஆகிய இரு தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவரும் மூன்றாவது சிறுகதை நூல். 2.மனசிலாயோ – ம. நவீன் கேரளாவில் 21…

வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது

இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் வல்லினம் இலக்கியக்குழு மகிழ்கிறது. கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத்துறை மாணவியாவார். இருபத்து மூன்று வயதான இவர் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது எழுத்து…

நாவல் முகாமும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது நிகழ்ச்சியும்

வணக்கம். வல்லினம் இலக்கியக்குழு 2020இன் முதல் நிகழ்ச்சியாக அக்டோபர் 17,18 ஆகிய நாட்களில் நாவல் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் தைப்பிங் நகரில் உள்ள (HOTEL GRAND BARON) விடுதியில் நடத்தப்படும். அதிக பட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ளத்தக்க விவாத அரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வல்லினத்தின்…

வல்லினம்: இளம் எழுத்தாளர் விருது

முன்னுரை கடந்த பல ஆண்டுகளாக வல்லினம் இலக்கிய குழு, மலேசிய இளஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்க்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. கோட்பாட்டு இலக்கிய பட்டறைகள், இலக்கிய முகாம்கள், கலந்துரையாடல் என பல நிகழ்ச்சிகளின் வழி மலேசிய இளைய சமூகத்திற்கு தீவிர இலக்கிய புரிதலை உருவாக்கவும் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…

இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது

                                இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது வல்லினம் இலக்கியக் குழு  மூத்தப் படைப்பாளிகளை கௌரவிக்கும் பொருட்டும் அவர்கள் படைப்புகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவும் வல்லினம் விருதை 2015இல் தொடங்கியது. இவ்வருடம்  இளம் எழுத்தாளர்களுக்கான ‘வல்லினம் விருது’ ஒன்றை அறிமுகம்  செய்ய உள்ளது. விருது தொகையாக 2000 ரிங்கிட்டும் நினைவு கோப்பையும் இந்த தேர்ந்தெடுக்கப்படும் இளம்…

பேய்ச்சி சர்ச்சை குறித்து சிறு விளக்கம்

கடந்த ஒரு மாத காலமாகப் பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு வகையான சர்ச்சைகள் எழுவதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இது பொதுவாக இலக்கியச் சூழலில் நடைபெறும் நிகழ்வுதான். ஆனால் இம்முறை வல்லினம் தரப்பில் இருந்து  போலிஸ் புகாரும்  கடித வழி தொடர்பாடல்களும் நடத்தப்பட்டன. முதல் புகார் பேய்ச்சி நாவலின் சில பகுதிகள் மட்டும் அதன் ஆசிரியர் ம.நவீன்…

நவீன இலக்கிய முகாம்

வல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன்,  எழுத்தாளர் சு.வேணுகோபால், சாம்ராஜ் மற்றும் அருண்மொழி நங்கை ஆகியோர் கலந்துகொள்கின்றனர். சுமார் 100…

சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரை தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு 2019க்கான வல்லினம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் மலேசிய இலக்கியத்திற்கு உழைத்த ஒருவரை கவனப்படுத்தும் விருதாகவே வல்லினம் இலக்கியக் குழு இவ்விருதை வடிவமைத்துள்ளது.…

மூன்று நாள் இலக்கிய முகாம்

வல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன்,  எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் சாம்ராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். சுமார் 100 பேருக்கு மட்டுமே…

எழுத்தாளர் சாம்ராஜ் மலேசிய வருகை

ஜோகூர் ‘பார்வை கல்விக் கழகம்’ ஏற்பாட்டில்  ‘சினிமாவும் அரசியலும்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வல்லினம் பதிப்பில் பிரசுரமான ‘ஊதா நிற தேவதைகள்’ நூல் வெளியீடும்  நவீன சினிமா குறித்த சொற்பொழிவும் இடம்பெறும். நாள்    : 27.7.2019 (சனிக்கிழமை) நேரம் : மாலை 4 மணிக்கு இடம் : அருள்மிகு இராஜகாளியம்மாள் ஆலய மண்டபம்…

ம.நவீனுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது

மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு மற்றும் இலக்கியச்செயல்பாடுகளில் அவரது பங்களிப்புக்காக இந்தச் சிறப்பு விருது வழக்கப்படுவதாக தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்துள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு…