நாவல் முகாமும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது நிகழ்ச்சியும்

cropped-mukappu.jpgவணக்கம். வல்லினம் இலக்கியக்குழு 2020இன் முதல் நிகழ்ச்சியாக அக்டோபர் 17,18 ஆகிய நாட்களில் நாவல் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் தைப்பிங் நகரில் உள்ள (HOTEL GRAND BARON) விடுதியில் நடத்தப்படும். அதிக பட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ளத்தக்க விவாத அரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வல்லினத்தின் இளம் எழுத்தாளர் விருதை பெறும் அபிராமி கணேசன் அவர்களுக்கான விருது வழங்கும் விழா 18.10.2020 பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்.

நாவல் முகாமுக்கான பங்கேற்பாளர் பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாசகர்களும் இலக்கிய ஆர்வளர்களும் விருது விழாவில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். கோவிட் பெருந்தொற்றினால் அரசாங்கம் அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே கலந்துகொள்பவர்கள் அனுமதிக்கப்படுவதால் முன் பதிவு அவசியம்.

அனைத்துக் கேள்விகளுக்கும்/ பதிவுகளுக்கும்: ம.நவீன் 0163194522

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *