
எள்ளலும், பகடியும், தத்துவக் கூர்மையும், வர்க்கப்பிடிமானமும் கொண்ட பிரளயன், பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணை இயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தாலும் அவரது ஜீவன் நாடகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. இவர் தமிழின் தொன்ம ஞானமும் நிகழ்வாழ்வின் மீதான கூரிய பார்வையும் ஆற்றல் மிக்க படைப்புச் செயல்பாடும் கொண்டவர். தமிழகத்தில் பல…