41வது இலக்கியச் சந்திப்பு (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன.
1. பாரம்பரியக் கலைகள்
மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு.
2. சாதியம்
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் சாதியம்.
3. சமூகச் செயற்பாட்டனுபவங்கள் மற்றும் சமகாலச் சவால்கள்
பொது மற்றும் சமூக சேவைகள், செயற்பாடுகளில் பணிசெய்தல் மற்றும் பணி செய்வோர் தொடர்பான விடயங்கள். (போர் மற்றும் போருக்குப் பிந்தியகால உளவியல்)
4. இலக்கியம்
மலையக, முஸ்லிம், தமிழ், தலித், விளிம்புப்பால்நிலை, புலம்பெயர் இலக்கியத்தளங்கள் மற்றும் கவின் கலைகள்.
5. தேசிய இனங்களின் பிரச்சினைகள்
மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களத் தேசியவாதங்கள், தேசியமும் பெண்களும், காணி தொடர்பான பிரச்சினைகள், தேசிய இனங்களுக்கு இடையிலான உறவுகள்.
மேற்கண்ட கருத்தாங்கங்களில் பேசப்படுவதற்கான அரங்குகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆளுமைகளும் செயற்பாட்டாளர்களும் பங்கேற்பர். ஒவ்வொரு தலைப்பினையும் பெண்ணிய நோக்கில் அவதானிக்கும் உரைகளும் இடம்பெறும். கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
——————————————————————————————————
குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு
தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.
கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.
நிலாந்தன், சோலைக்கிளி, யோ. கர்ணன், அ.முத்துலிங்கம், தமிழ்க்கவி, மு. நித்தியானந்தன், சண்முகம் சிவலிங்கம், ந.இரவீந்திரன், ஸர்மிளா ஸெய்யித், தேவகாந்தன், பொ.கருணாகரமூர்த்தி, ஏ.பி.எம். இத்ரீஸ், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கற்சுறா, செல்வம் அருளானந்தம், லெனின் மதிவானம், லிவிங் ஸ்மைல் வித்யா, றியாஸ் குரானா, எம் .ரிஷான் ஷெரீப், ம.நவீன், ஓட்டமாவடி அறபாத், ஹரி ராஜலட்சுமி, கருணாகரன், மா. சண்முகசிவா, கறுப்பி, மோனிகா, தமயந்தி, பூங்குழலி வீரன், எம்.ஆர்.ஸ்ராலின், திருக்கோவில் கவியுவன், இராகவன், லீனா மணிமேகலை, ராகவன், தேவ அபிரா, கே.பாலமுருகன், குமரன்தாஸ், விஜி, யாழன் ஆதி, லெ. முருகபூபதி, தர்மினி, ஆதவன் தீட்சண்யா, அகமது ஃபைசல், கலையரசன், அ. பாண்டியன், அஜித் சி. ஹேரத், ச.தில்லை நடேசன், எஸ்.எம்.எம்.பஷீர், மகேந்திரன் திருவரங்கன், மஹாத்மன், லதா, ஷாஜஹான், பானுபாரதி, யாழினி, விமல் குழந்தைவேல், மேகவண்ணன், அஷ்ரஃப் சிஹாப்தீன், மெலிஞ்சிமுத்தன், யோகி, அஸ்வகோஷ், ந. பெரியசாமி, தேவதாசன், ராஜன் குறை, ஷோபாசக்தி… மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடு.
2013 ஜுலை 20ம் தேதி யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் மலர் வெளியிடப்படும்.
பிரதிகளைப் பெறுவதற்கு:
இலங்கை – கருணாகரன், poompoom2007@gmail.com / இந்தியா – கருப்புப் பிரதிகள், karuppupradhigal@gmail.com / மலேசியா – ம.நவீன், na_vin82@yahoo.com.sg / அவுஸ்திரேலியா – லெ. முருகபூபதி, letchumananm@gmail.com / கனடா – மெலிஞ்சிமுத்தன், melinchi10@gmail.com / பிரித்தானியா – ராகவன், raagaa@hotmail.com / நெதர்லாந்து – கலையரசன், kalaiy26@gmail.com / ஜேர்மனி – ஜீவமுரளி, jsinnatham@aol.com / டென்மார்க் – கரவைதாசன், karavaithasan@yahoo.dk / நோர்வே – தமயந்தி, simon.vimal@yahoo.no / பிரான்ஸ் – ஷோபாசக்தி, shobasakthi@hotmail.com
– 41வது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக்குழு, யாழ்ப்பாணம் –