கலை இலக்கிய விழா 6 (2.11.2014)

வருடம்தோறும் வல்லினம் இலக்கியக்குழு முன்னெடுத்து நடத்தும் ‘கலை, இலக்கிய விழா’ ஆறாம் ஆண்டாக இவ்வருடம் 2.11.2014ல் நடைபெறுகிறது. பல புதிய அங்கங்களுடன் இவ்வருடம் கலை இலக்கிய விழாவின் வேலைகள் துவங்கியுள்ளது.

வல்லினம் விருது

வல்லினம் முதல் ஆண்டாக இவ்வருடம் ‘வல்லினம் விருதை’ ஏற்பாடு செய்துள்ளது. இம்முறை வல்லினம் விருது எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதளிப்பு நிகழ்வில் அ.ரெங்கசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்படும். அதோடு அவரது ஆவணப்படமும் இதே நிகழ்வில் வெளியீடு காணும்.

லீனா மணிமேகலை வருகை

கவிஞர் மற்றும் இயக்குனரான லீனா மணிமேகலையும் இந்நிகழ்வுக்குச் சிறப்பு வருகை தருகிறார். லீனா மணிமேகலையின் இயக்கத்தில் உருவான ஆவணப்படங்களும் திரைப்படமும் இந்நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டு கலந்துரையாடல் நடைபெறும்.

நிகழ்வில் கலந்துகொள்ள

இந்நிகழ்வுக்கென சிறப்பாக ‘கார்டுகள்’ விற்பனையாகின்றன. 50 ரிங்கிட்டு விற்பனையாகும் இக்கார்ட்டுகளை வாங்குவதன் மூலம் வாசகர்களுக்கு அ.ரெங்கசாமியின் நூல், ஆவணப்படம் மற்றும் ஒருவருடத்துக்கான பறை இதழ் (4 இதழ்கள்) போன்றவை கிடைக்கும்.

முன்பதிவு

நிகழ்வு தங்கும் விடுதியில் நடைப்பெறுவதால் முன்பதிவு அவசியம். முன் பதிவுக்கு ம.நவீன் (0163194522) என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

நிகழ்வின் விபரம்

நாள்: 2.11.2014 (ஞாயிறு)

நேரம்: மதியம் 2.00

இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலம்பூர் (ம.இ.கா கட்டடத்தின் எதிர்ப்புறம்)

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...