எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு வசதி உண்டு. அத்தனை நீளமும் கைப்பிடியளவு அமைந்திருக்கவேண்டும். இல்லையேல் விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது. விளையாட்டு என்பதே சுவாரஸ்யம் மிகுந்ததுதானே. இப்போது உடம்பை குறைக்கவும் வயதை மறைக்கவும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நினைவுகளில் சூழ்ந்திருப்பது அந்த போட்டி விளையாட்டுதான்.
இது குழு முறை விளையாட்டு. குழுவாக செயல்படவேண்டும். ஆண்களும் பெண்களும் பாகுபாடின்றி விளையாடலாம். குழுவில் பெண்கள் இருந்தால் போதும். பெண்களோடு விளையாடுவதே குஷிதான்.
தோட்டத்துவீடு என்பதால் வீட்டில் வெளியிலும் சாலை பெரிதாகவே இருக்கும். ஓடியாட மட்டுமல்ல உட்கார்ந்து பேசவும் வசதியானது. வீட்டுக்கொரு மரத்தின் நிழலில் இருப்பது அலாதியானது. மரத்தினில் பழத்திற்கு வந்துப்போகும் பறவைகளின் பல வித இறகுகள் சிரிப்பை கொடுக்கும். பெயர் தெரியாத அந்த பறவைகளுக்கு அதன் வண்ண சிறகுகள் கொண்டே பெயர்களை வைப்போம். ஆளுக்கு ஆள் ஒரு பெயர் வைத்தாலும், யாரோ ஒருவர் வைத்த பெயர்தான் நிலைக்கும். இப்போது கூட அந்தப் பறவைகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது அதே கறுப்பு கழுத்து குருவியாக , பச்சை ரெக்கை குருவி, கொண்டை வைச்சான் குருவியாகவேதான் தெரிகிறது. பெயர் வைத்தவர்கள் குறித்த நினைவுகளை எல்லாம் சூழல்கள் அழித்துவிட்டன.
அந்த சாலையில்தான் எங்களுக்கான அழைப்புகள் வரும். விளையாட அழைப்பவர்கள் எப்போதும் வீட்டிற்குள் வருவதில்லை. அவர்கள் நேரம் அவ்வளவு குறைவானது. சாலையில் நடந்து கொண்டே வீட்டை கடக்கும் போது நண்பனை அழைத்துக் கொள்வர். அடுத்தடுத்த வீட்டை கடந்து செல்லும் போது ஒவ்வொருவராக பிந்தொடர்ந்து விளையா ஆயுத்தமாவார்கள். அப்போதெல்லாம் விளையாட்டுகளின் ஆண் பெண் என நாங்கள் பார்ப்பதில்லை.
திடல் என்ற ஒன்று அப்போது இருந்தது. எது என்னவென்று இப்போது கேட்பவர்களுக்கு ; சில ஆண்டுகளுக்கு முன் திடல் என்ற ஒன்று ஒவ்வொரு குடியிறுப்பு பகுதிகளிலிலும் இருந்தது. சுற்றிலும் பச்சைப்பசேலென்றும் மரங்களுக்கு மத்தியிலும் காற்றோட்டமாக அமைந்த இடம் அது. இப்போது, அடுக்குமாடி கட்டிடங்களுக்கு நடுவில் கார்கள் நிறுத்தும் இடத்தில் கொஞ்சமாய் தெரியும் நிழலில் புற்களை நட்டுவைத்து, குழந்தைகளுக்கான ஊஞ்சலும் பெரியவர்களுக்கான ஓய்வு நாற்காலியும் இரவு காதலர்களுக்காக விளக்குகள் வைக்கப்பட்டிருப்பதுதான். அதன் முந்தைய வடிவத்தின் பெயர்தான் திடல். பெயர்தான் அப்படியே இருக்கிறது ஆனால் அதன் வடிவம் மூன்றின் ஒன்றுதான் இருக்கிறது.
இப்போது இருக்கும் திடலில் மூன்று நான்கு முறை சுற்றவேண்டும். அப்போதுதான் அன்றைய திடலின் பாதியாவது சுற்றியிருக்கமுடியும்.
எல்லா விளையாட்டுகளுக்கும் ஏற்ற இடம்தான் அது. பல விளையாட்டுவீரர்களை நமக்கு கொடுக்க காரணமாகவும் இருந்தது. அதையெல்லாம் தொலைத்து தொப்பையை குறைக்க ஒவ்வொருவரும் பணம் கொடுத்து இயந்திரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாளில் திடல் என்பதை புகைப்படங்களிதான் பார்த்து தொலைக்கப்போகிறோம் என திகிலடிக்கிறது.
நாங்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை பொருத்து ஒரு குழுவில் எத்தனை பேர் என பிரிப்போம். குழுவில் ஒரு தலைவர் இருக்கவேண்டும். அவர்தான் விளையாடவேண்டிய கம்பை கொண்டுவருவார். அவர் அனுமதித்தால் அவர் குழுவில் இருப்பவர்கள் ஆளுக்கொரு கம்பை எடுத்துவரலாம்.
இரண்டு செங்கற்களை பக்கத்து பக்கத்தில் அடுத்து இரண்டுக்கும் இடையில் சின்னதான் ஒரு கம்பினை வைப்போம். ஒரு குழு கற்களுக்கு பின்னால் இருக்கும் மற்றொரு குழு கற்களுக்கு முன்னால் தூரமாக இருக்கும். முதலில் தலைவர்தான் தன்னிடம் இருக்கும் கம்பினை வீசியெறிந்து செங்கற்களின் மேல் இருக்கும் சின்ன கம்பினை விழ செய்யவேண்டும். அதுதான் விளையாட்டு. தலைவரை அடுத்து ஒவ்வொருவரும் பின்தொடர்வோம். யார் அடித்து அந்த சின்ன கம்பு கீழே விழுகிறதோ அவர் எங்கள் குழுவை வெற்றியடையவைத்துவிட்டார். அதல் பல படிநிலைகள் வைத்திருந்தோம். ஒன்று முதல் ஒன்பது வரை எண்களை கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருமாதிரி நீண்ட கம்பை வீச வேண்டும்.
விளையாட்டுகள் என்பது யாருக்கான உடற்பயிற்சியோ, தொப்பை குறைப்போ அல்ல. அது ஒரு குதூகலம். கலை. அவ்வாறான குதூகலத்தை நாம் இருக்கும் இடத்தில் கூட கொண்டுவரலாம்.
அழிப்பான்களை இரண்டினை எடுத்து கொள்ளுங்கள். நீங்களும் நண்பரும் ஆளுக்கு ஓர் அழிப்பானை வைத்துக் கொண்டு. மேஜைக்கு அருகில் அமருங்கள். ஒரு கை , ஒரு விரல் , ஒரு முறை , ஓர் ஆள் ஒரு அழிப்பான் இன்னொரு அழிப்பான் மீது படவேண்டும். யாரின் அழிப்பான் முதலில் இன்னொரு அழிப்பான் மீது படுகிறதோ அவர் வெற்றி பெற்றவர். அதில் ஒரு குதூகலம் உண்டு. பொறாமை உண்டு. போனா போகுதும் உண்டு. எல்லாவற்றை தொலைத்து கணினி திரையில் கேம்களின் கொலை செய்துக் கொண்டிருக்கிறோம்.
இதுபோன்ற சின்னப்பிள்ளைகள் விளையாட்டாக இல்லாமல் பெரியவர்களின் சீரியஸான விளையாட்டும் உள்ளன. அப்படி ஒரு சீரியஸான விளையாட்டைப்பற்றி நினைக்கும் போது காற்புள்ளி குறித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
பரபரப்பாக வந்து சேர்ந்திருக்கிறான் அந்த அறிவிப்பாளன். கையில் விளையாட்டு போட்டி குறித்த முடிவுகள். அலாதி நம்பிக்கையான குரலில் பேச தொடங்கினார். ஆண் குறி சுடும் போட்டி என சொன்னதும் மனதில் சின்ன மின்சாரம், சொன்னவருக்கும் கேட்டவர்களுக்கும். ஆணுக்கு அருகில் காற்புள்ளி வைக்காத காரணத்தால் இன்னமும் சிரிப்பு நினைவாக பலர் மனதில் இருக்கிறது.
அப்படியொரு நினைவுத்துகள்களாக திடல்கள் ஆகாமலிருக்கட்டும். அப்போது நம்மால் சிரிக்க முடியாது.