Author: தயாஜி

இச்சை : இரண்டு குறுங்கதைகள்

உனக்கென்ன கேடு சொல்லு மிஸ்டர் குமார் பயந்துவிட்டார். இனி சமாளிக்கவே முடியாது. இவ்வளவு நாட்களாகப் காப்பாற்றி வந்தவை எல்லாம் காற்றோடு போகப்போகின்றது. ஏற்கனவே பாதி பறந்தாயிற்று. மிச்சமுள்ளவை எல்லாம் வீட்டிற்குப் போனதும் பறக்க தயாராக இருக்கின்றன. தன் மனைவிக்குத் துரோகம் செய்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாகத் தான் லீலாவைப் பார்த்திருக்கக் கூடாது எனலாம். முதல் நாள்…

மட்டக்களப்பில் வல்லினம் 100

சில முறை தமிழகம் சென்று வந்திருந்தாலும் இலங்கை செல்லாதது மனதில் ஒரு குறையாகவே இருந்து வந்தது. சமீபத்தில் வெளியிட்ட ‘வல்லினம் 100’ குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இந்நூல் சென்று மலேசிய – சிங்கப்பூர் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற யோசனை வந்தது. அப்போதே அதற்கான திட்டமிடலும் செய்ய…

மண்புழுக்கள் : மூதாதையர்களின் உயிரணுக்கள்

வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை அறிய முடியும். அதற்கான காரணம் வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படைப்பாளி இயங்குவதாகவும் இருக்கலாம். ஒருபடைப்பு அதன் அசல் தன்மை குன்றாமல் இருக்க…

வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு: விஷ்ணுபுரம் விருது அனுபவம்

அப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே சிலர் அவர்களுக்குள் முகபாவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். என் கண்கள் சீ.முத்துசாமியைத் தேடின. தூரத்தில் அவர் அமர்ந்திருந்தார். யாருக்கோ என்னவோ நடப்பது போல அங்கும் இங்கும்…

ஆணொருவன் அழுகிறான்

அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும் பூதமொன்று அவனது அழுகை துளியின் சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது இது சாத்தியமே ஆகக்கூடாதென அசரீகள் முழுக்க பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின   ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள் அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து இதயத்தை கழற்றி அதற்கு தங்க முலாம் பூசியதன் தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான் விபரம் தெரிந்தவிட்ட…

தன்னுடன் பேசுதல்

ஆடம்பரத் தேவைகள் அத்தியாவசியத் தேவைகள் என இரு பகுதிகளாக பதில் சொல்லச்சொல்லி பள்ளிகளில் கேட்பார்கள். எது இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மால் உயிர் வாழ முடிகிறதோ அது ஆடம்பரத் தேவைகள்.  எது இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ முடியாதோ அது அத்தியாவசிய தேவைகள் என இலகுவாக ஆசிரியர் பாடம் நடத்தியிருந்தார். இப்போதுவரை அந்த எளிய கோட்பாடாக நினைவில்…

நல்ல புழுதியும் நலம்கெட்ட வீணைகளும்

மலேசிய முகநூலர்கள் மத்தியில் அதிகமாக ஒரு காணொளி பகிரப்பட்டது. காரில் இருந்து அக்காணொளியை ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். தெருவில் நைந்து, கிழிந்து, அழுக்குப் படிந்த ஆடையுடன் மெலிந்த, நீண்ட செம்பட்டை முடியுடன் தளர்ந்திருக்கும் வயோதிகரிடம் காரில் இருந்தபடியே இளைஞர் ஒருவர் ஏதோ விசாரிக்கிறார். “இன்னும் பாட்டுப் பாடறீங்களா ?” “ஆமா பாடிகிட்டுதான் இருக்கேன்…” “ஓ… எங்க பாடறீங்க?”…

மருந்தென்னும் மாயப்புள்ளி

மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம் வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை நோய்க்கூறுகளை துல்லியமாக உடல்புள்ளிகளில் கண்டறிந்தார்   ஒவ்வொரு புள்ளிகளிலும் ஒரு கதையை செருகச்சொல்லி தீவிரமாக வேறெதையோ தேடலானார்   உடன்பாடில்லையென்றாலும் கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன்   முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக எழுதிக்கொடுத்தார் சின்ன வயதில் யாரையோ கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை அங்குச் செருகினேன் நெற்றிப் பொட்டு வலித்தது…

இன்னொரு கிளை முளைக்கிறது

அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவே தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும். முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு…

நீயின்றி அமையாது உலகு -10

அன்று காலை அலுவலகத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அழகியொருத்தி வேலை கேட்டு வந்திருந்தாள். பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் வேலை என்பதால் ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் சுற்றை முடிக்கும்போது அலுவலக வாசல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த யுவதியைப் பார்க்க நேர்ந்தது. யுவதியைக் கண்டதும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் போல ஏதோ ஒன்று காதில்…

காப்புறுதி VS ஆப்புறுதி

சமீப காலமாக ஊடகங்களிலும் இணைய உலகிலும் காப்புறுதி குறித்த விளம்பரங்களை கேட்க, பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் அது தொடர்ந்து இருந்திருக்கிறதுதான் தற்போதைய அனுபவத்தால் அவ்விளம்பரங்கள் தனியாகத் தெரிகிறது போலும். நம்மில் பலருக்கு காப்புறுதி குறித்துத் தெரிந்திருக்கும். பலவித நிறுவனங்களில் இருந்து நாம் காப்புறுதியை வாங்கியிருப்போம். இன்னும் சொல்லப்போனால் நம் நண்பர் குழுவில் ஒருவராவது காப்புறுதி முகவராக…

நீயின்றி அமையாது உலகு 9

பலவித நாகங்களுக்கு நடுவில் நான் மட்டும். என் இரு கைகளையும் இறுக்கப்பிடித்த மலைப்பாம்புகள் ஆளுக்கு ஒருபக்கம் என இழுத்தன. தப்பித்து ஓடிவிட முடியாதபடி கால்களை கருநீல நாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்திருந்தன. சுற்று வளைத்துவிட்ட நாகங்களின் பளபளத்த மேனி கண்களைக் கூசியது. இருக்கும் இடைத்தைப்பற்றியோ கிடக்கும் நிலை பற்றியோ என்னால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை.…

நீயின்றி அமையாது உலகு 8

கடந்த இதழின் தொடர்ச்சி அதன் பின் சந்திக்கும்போதெல்லாம் அந்த அக்காவிற்கு நன்றி சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரிடத்திலும் சிடுசிடுவென இருக்கும் அவர் என்னிடம் சிரமமின்றிப் பழக ஆரம்பித்தார். தொழிற்சாலையில் வேலை செய்யும் மற்றவர்க்கு அது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. அது நிர்வாகத்தினர் வரை சென்றது. அன்று பணியாளர்களும் மேனேஜரும் சந்திக்கும் நாள். முதல் நாள்தான் எங்களுக்கு தெரியும்.…

நீயின்றி அமையாது உலகு – 7

உதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டன. கண்களைத் திறக்கத் தேவையான விசை எதுவென பிடிபடவில்லை. புருவங்கள் துடித்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. அந்த நொடி வாழ்வின் எல்லையில் நின்று எல்லையற்ற எதையோ பார்ப்பதாகப் பட்டது. கருமேகங்களின் மேல் நான் மிதப்பதாகவும், நானே மழையாகப் பொழிவது போலவும். நானே கடலாக, நானே நீராவியாக, அருவமானதாக, நானே அண்டம் முழுதும் நிறைந்துவிட்ட…

நீயின்றி அமையாது உலகு – 6

மீண்டும் பார்க்க விரும்பும் முகங்களில் ஒன்றுதான் அவளுடையது. முதன் முதலில் அவளைப் பார்த்த பிறகுதான் என் பெரியமூக்கின் கீழ் சில உரோமப்புள்ளிகள் உருவாகியிருந்ததை முழுமையாக உணர்ந்திருந்தேன். லேசாக அதனைக் கிள்ளியும் பார்த்தேன். அவை மூக்கின் கீழ், உதட்டின் மேல் முட்டிக்கொண்டு இருந்தன. இன்னும் சில நாட்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போதுதான் கவனித்தேன். இனி நானும்கூட…