கேள்விகளிலிருந்து பதிலுக்கு

tayaji coverஎன் முதல் புத்தகம் இது. ஐந்தாண்டுகள் வல்லினத்தில் நான் எழுதிய பத்திகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக்கப்பட்டுள்ளது. பெயருக்குத்தான் பல ஆண்டுகள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டாலும் அந்தந்த காலக்கட்டத்தோடு சில படைப்புகள் காலாவதியாகிவிடுவதை இந்த நூலுக்காகக் கட்டுரைகளைத் தொகுக்கும் போது உணர்ந்தேன். இது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. எழுத்தென்பது கருத்து ரீதியில் முரண்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் காலம் கடந்தும் நிற்கவேண்டும். அப்படியான பயத்தையும் பொறுப்பையும்தான் இத்தொகுப்பு வெளிவரும் வேலையில் நான் சுமக்கிறேன்.

எனக்குள் இருக்கும் அனுபவங்களுக்கும் என் கேள்விகளுக்கும் வடிக்காலாக என்னுடைய பத்திகளை நான் அணுகினேன். அவற்றை வாசித்து எப்போதும் கருத்து கூறி, அகச்சுழலில் இருந்தும் புறச்சூழலில் இருந்தும் தப்பிக்க உதவியாக இருந்த வல்லினம் நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு.

“எழுத்தென்ற ஒன்று இருக்கிறது உனக்கும் வந்தால் எழுதலாம்” என தொடக்கப்புள்ளி வைத்த என் அப்பா வெள்ளைரோஜா என்ற குணசேகரனுக்கும், இந்த பத்திகளை எழுதவும் இத்தொகுப்பு வெளிவர காரணமாகவும்  இருக்கும் வல்லினம் இணைய இதழ் ஆசிரியர் ம.நவீனுக்கும் எனது நன்றி.

எழுத்தென்னும் பெரும்பசிக்கு தன்னையே தின்ன கொடுப்பதும் கலையில் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்துக்கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டுச் சிரிக்கிறேன்.

அன்புடன் தயாஜி

1.11.2015ல் நடைப்பெறும் கலை இலக்கிய விழாவில் இந்த நூல் வெளியீடு காண்கிறது.

1 comment for “கேள்விகளிலிருந்து பதிலுக்கு

  1. anitha pugal
    October 27, 2015 at 11:36 pm

    அன்பு பேச ஆரம்பித்தால் பலரின் கண்ணீர் துளிகள் இப்புவியில் விழும். இயற்கைப் பேரிடரைத் தடுக்க இயலும்…

Leave a Reply to anitha pugal Cancel reply