மலேசிய சோசியலிஸ கட்சியுடன் இணைந்து வல்லினம் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ஈப்போவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம், ஆதவன் தீட்சண்யா, வ.கீதா ஆகியோர் ‘இலக்கியத்தில் அரசியல்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பி.எஸ்.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் நாகேந்திரன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கட்சியின் துணைத்தலைவர் மு.சரஸ்வதி அவர்கள் அனைவரையும் வரவேற்று தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்க ஊக்குவித்தார்.