வல்லினத்தின் குறுநாவல் பதிப்புத்திட்டம் நாள் நீட்டிப்பு

Publishing-industries-picமலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றிவரும் வல்லினம் இவ்வருடம் குறுநாவல் பதிப்புத்திட்டத்தில் காலக்கேடு 28 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்திட்டத்தின் மூலம்:

  • பதிப்பிக்கப்பட்ட குறுநாவல்கள் உலகம் முழுதும் உள்ள தமிழ் வாசகர்கள் மத்தியில் சென்று சேரும்.
  • நூலாக்கப்பட்ட குறுநாவல்களை ஒட்டிய தொடர் கலந்துரையாடல்கள் நாடு முழுவதும் நடைப்பெறும்.
  • பத்து நாவல்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே ஒரு நாவல் ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும்.

போட்டியின் விதிமுறைகள்: 

  • தலைப்பு பொதுவானது.
  • வயது வரம்பில்லை.
  • குறுநாவலுக்கான களம் நிச்சயம் மலேசிய/ சிங்கை நிலம் சார்ந்ததாக இருத்தல் அவசியம்.
  • குறுநாவல் சொந்தப்படைப்பாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே அச்சில் வெளிவந்ததாகவோ இணையத்தில் உள்ளதாகவோ தழுவலாகவோ, மொழிபெயர்ப்பாகவோ இருத்தல்கூடாது.
  • கணினியில் தட்டச்சு செய்யப்பட்டோ அல்லது கையெழுத்துப்பிரதியாகவோ அனுப்பலாம்.
  • குறுநாவல் 150 பக்கத்திற்கு மேற்போகாமலும் 100 பக்கத்துக்குக் குறையாமலும் இருப்பது அவசியம். (கணினி எழுத்துரு அளவு : vijaya- 11point , Latha-8point)
  • ஓர் எழுத்தாளர் எத்தனை படைப்புகளையும் அனுப்பலாம். ஆனால் ஒரு படைப்பாளி ஒரு பரிசுக்கு மட்டுமே தகுதியானவராவார்.
  • படைப்பைத் தபால் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம்.
  • தேர்ந்தெடுக்கப்படும் நாவலை செறிவாக்கவும் எழுத்தாளர் அனுமதியுடன் மேம்படுத்தவும் வல்லினம் குழுவினருக்கு அனைத்துச் சுதந்திரமும் உண்டு.
  • இது பதிப்புத்திட்டம் என்பதால் வல்லினம் இலக்கியக் குழுமத்தினரும் தாராளமாகப் பங்கெடுக்கலாம்.
  • எழுத்தாளரின் முழுவிபரங்கள் (அடையாள அட்டையில் உள்ளது போல பெயர், அடையாள அட்டை எண், தற்போதைய வீட்டு முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண்) படைப்புடன் தனித்தாளில் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
  • மலேசிய மற்றும் சிங்கைப் படைப்பாளிகள் (Citizen/PR உள்ளவர்கள்) மட்டுமே பங்குப்பெற இயலும்.
  • எழுதப்பட்ட குறுநாவல், ‘வல்லினம் குறுநவல் பதிப்புத்திட்டத்துக்காகத் தானே சுயமாக எழுதியது என்று போட்டியாளர்களின் கையொப்பமிடப்பட்ட உறுதிக்கடிதம் ஒன்றை உடன் இணைத்து அனுப்பவேண்டும்.
  • அனுப்பப்பட்ட படைப்புகள்  நூலாக்கம் செய்ய வல்லினம் முழுஉரிமை பெற்றிருக்கும். வல்லினத்தின் அனுமதியின்றி மீள்பிரசுரம் செய்யக்கூடாது.
  • குறுநாவலை அனுப்ப வேண்டிய இறுதிநாள் 28 பிப்ரவரி 2018. இத்திகதிக்குப்பிறகு அனுப்பப்படும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

2 comments for “வல்லினத்தின் குறுநாவல் பதிப்புத்திட்டம் நாள் நீட்டிப்பு

  1. November 22, 2017 at 2:08 pm

    குறுநாவலுக்கான களம் நிச்சயம் மலேசிய/ சிங்கை நிலம் சார்ந்ததாக இருத்தல் அவசியம். # இந்தக் கட்டுப்பாட்டை மட்டும் கொஞ்சம் பரிசலீக்கலாம்.

  2. K.I.Narayanan
    December 9, 2017 at 3:45 am

    Naal neetipu- muyarci seiyalam

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...