வல்லினத்தின் தொடர் பயணம்

ராஜவல்லினத்தின் நூறாவது இதழ் வருவதில் மகிழ்ச்சி. இச்சமயத்தில் வல்லினத்தின் ஆசிரியர் ம.நவீன் குறித்து நினைத்துப் பார்க்கின்றேன். 2004 என நினைக்கிறேன். அப்போது நவீன் நயனம் அலுவலகம் வந்திருந்தார். இதழின் வடிவமைப்பையும் அதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் செய்துக் கொடுக்க முடியுமா என கேட்டார். அப்போது அதற்கான சாதனங்கள் எங்களிடம் இருந்தன. அதனை செய்வதற்கான ஆட்களும் இருந்தார்கள். நானும் செய்துக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். அதற்கு முன் நவீனை எனக்கு அவ்வளவாக தெரியாது. சில இலக்கிய நிகழ்ச்சிகளில்  பார்த்திருக்கின்றேன். இலக்கியவாதி என்கிற வகையில் அவரைத் தெரியும். அச்சமயத்தில் வல்லினம் வெளிவந்த மாதங்களில் அவர் கேட்டுகொண்டதன் படி அவற்றை செய்து கொடுத்தோம். வல்லினம் இணைய இதழாக வந்ததபோது அதன் வாசகனாக இருந்தேன். அப்போது அதில் எழுதுகின்றவர்கள் குறித்து அதிகம் தெரியாவிட்டாலும் இப்போது நன்கு அறிமுகம் உள்ளது. பத்து பதினொரு ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து அவர்கள் செயலாற்றிவருவது மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. வெளிவரும் இந்த நூறாவது இதழுக்கு எனது வாழ்த்துகள்.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...