
2007இல் வல்லினம் அச்சு இதழ் தொடங்கியது முதலே அதை நிறுத்தப்போகும் தினம் குறித்த பேச்சும் தொடங்கிவிட்டது. அதற்கு முன் தமிழகத்தில் சிற்றிதழ்கள் தோன்றுவதும் மறைவதும் சடங்கான ஒன்றாக இருந்ததால் அதன் நீட்சியில் வல்லினத்தின் ஆயுள் கால நிறைவு குறித்து ஆர்வமாகவே காத்திருந்தோம். நிதானம் என்ற பெயரில் சோம்பேறித்தனத்தையும், புத்திசாலித்தனம் எனும் அர்த்தத்தில் பின் வாங்குதலையும், இலக்கியவாதியின்…