Author: இமையம்

மனஊக்கமும் செயலூக்கமும்

‘பறை’ என்ற ஆய்விதழின் மூலம் ‘வல்லினம்’ என்ற அமைப்பை 2014ல் அறிந்தேன். இதழின் உள்ளடக்கம் முக்கியமானதாக தோன்றியது. அவ்விதழுடன் மாணவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட ‘யாழ்’ என்ற ஓர் இதழும் இலவசமாக இணைக்கப்பட்டிருந்தது. ஏன் தமிழ்நாட்டில் இதுபோன்ற முயற்சிகள் வரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலுள்ளவர்கள் கல்வி குறித்து வைத்திருக்கும் கற்பிதம் ஆபத்தானது. மலேசியாவிலுள்ள இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், கல்வி…

வாழ்வதின் பொருட்டு : உலகமயமாக்கலும் புலம் பெயர்ந்தோர் எழுதிய நாவல்களும்

‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே’ நற்றிணை – 153. தனிமகனார். பலநாடுகளில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலவரங்கள், இன அழித்தொழிப்புகள், போர், அரசியல் காரணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்கள் மட்டுமே புலம்பெயர்தலை உலகமயமாக்கலை ஏற்படுத்தியது என்று கூற முடியாது. இரண்டாம் உலகப்போருக்குப்…

புலம்பெயர்ந்தவர்களுடைய தன் வரலாற்றுக் கதைகள்

“மண்ணு வளமிருக்க மகத்தான நாடிருக்க – நாங்கள் நாடு விட்டு நாடு வந்து – மறு நாட்டான் சீமையிலே மரம் வெட்டிப் பால் சுமந்து மலை வெட்டி மண் சுமந்து காடு வெட்டிக் கல்லுடைத்து கையேந்தி கூலி வாங்கி பாடுபட்ட கதைகளையும் பட்ட துன்பம் அத்தனையும் பாட்டிலே சொல்லப்போனால் பலகாலம் ஆகுமென்று எண்ணாது எண்ணி எண்ணி…

ஏக்நாத்தின் ஆங்காரம் நாவல்

ஏக்நாத் எழுதியிருக்கிற ஆங்காரம் நாவல் ஒரு தனிமனிதனுடைய கதையோ, ஒரு குடும்பத்தினுடைய கதையோ அல்ல. ஒரு ஊரைப் பற்றிய, குறிப்பிட்ட ஊரில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களைப்பற்றிய கதை என்று சொல்லலாம். கதை நடக்கிற ஊரிலுள்ள மனிதர்களைக் காப்பதற்காக ஊருக்கு வெளியேயும், ஊரைச் சுற்றியும் இருக்கிற மந்திரமூர்த்தி, பூதத்தார், சொரி முத்தையன், சொரி முத்து அய்யனார், வடக்குவா…

தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்

“வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன” போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் – புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை,…

வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள்

எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு…

அண்மைக்காலச் சிறுகதைகள்

மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும்.…

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம. நவீன்

தமிழில் விமர்சனம் என்பது அரிதாகிவிட்டது. விமர்சனம் இருக்கிறது என்று சொன்னால் அது முதுகு சொறிந்து கொடுப்பதாக, நட்பு சார்ந்ததாக, ஆதாயம், அரசியல், எதிர்ப்பார்ப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஒரு படைப்பை அதன் பலம் சார்ந்து, தரம் சார்ந்து விமர்சிக்கின்ற பண்பு அருகிவிட்டது. இப்போக்கு இலக்கியப் படைப்பிற்கு மட்டுமல்ல மொழிக்கும் இழப்பு. பொய் உரைகளையே நாம் இலக்கிய விமர்சனம்…

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்: நூல் விமர்சனம்

உலகில் எழுதப்படுகின்ற எல்லா இலக்கியப் படைப்புகளின் நோக்கமும் அன்பை சொல்வதற்கான வார்த்தையை, வழியைத் தேடுவதுதான். கண்டடைவதுதான். அந்த வகையில் பூங்குழலி அன்பை சொல்வதற்கான சிறந்த வழியாக, மொழியாக, வடிவமாக கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு அன்பை சொல்வதற்கான சொல்லும், மொழியும், வழியும் கிடைத்ததா என்பதை “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” கவிதைத் தொகுப்பை படிக்கிற வாசகர்கள் அறிவார்கள். நிகழ்தலும்…

2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம்

“எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட…