
அவன் தனிமையில் முதுகை கடலுக்குக் காட்டியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். கடுமையான காற்று. வானம் மிகப் பிரகாசமாக, மேகத்தின் தடயம் ஏதுமின்றி இருக்கிறது. கடல் நீரில் பிரதிபலிக்கும் மினுங்கும் சூரிய ஒளியில், அவனது முகம் தெளிவாகத் தெரியவில்லை. கிரீச்சிடும் துருவேறிய ஈரமான பெரிய இரும்புக் கதவுகள். எங்கோ அவற்றின் மேற்பகுதியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தத் தடித்த கனத்த…