Author: ம.நவீன்

குரோசாவாவின் கண்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில்…

பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம்

19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்  இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன்.

ஞமலி

மோப்பம் பிடித்தபடி கண் முன்னே திரிந்து கொண்டிருந்தவன், எதிர்வீட்டு வாயிற் கதவோரம் எப்போது காலைத் தூக்கினான் என்றே தெரியவில்லை. காலணி ஒன்று பறந்து வந்து இரும்புக் கதவில் மோதி எழுப்பிய சத்தத்தில்  சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டு ஓரடி பின் வாங்கி குரைத்தான். பின்னர் முன் கால்களை படுக்கவைத்து பிட்டத்தை தூக்கியபடி காலணியைப் பார்த்து வாலை ஆட்டத்தொடங்கினான்.…

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

எனது இலக்கிய வாசிப்பை 2006க்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். என் பதினேழாவது வயதில் நான் பணியாற்றிய வீரா புத்தகக் கடை வழியாக சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, தமிழ்வாணன், ராஜேஷ்குமார், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் என ஒரு ஜனரஞ்சக வாசிப்புப் பின்புலம் உருவாகியது. பௌத்தத்தில் ஆர்வம் ஏற்பட்ட காலகட்டத்தில் வாசிப்பு ஓஷோவை…

விமர்சனம் ஏன் தேவையாகிறது: பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலை முன்வைத்து

ஒரு புனைவிலக்கியம் குறித்து விமர்சனம் எழுத பல காரணங்கள் உள்ளன. படைப்பின் நுண்தளத்தைச் சுட்டிக்காட்டி அதன் வழி அப்படைப்பைப் பொது வாசகர்கள் மேலும் தீவிரமாக அறியும் வழிகளை உருவாக்குவது; அதிகரித்து வரும் நூல் பிரசுரங்களுக்கு மத்தியில் மேம்பட்ட படைப்புகளை அடையாளம் காட்டுவது; தத்துவம், வரலாறு என ஒரு படைப்பில் தொய்ந்துள்ள பிற அறிவுசார் தகவல்களை உரையாடல்களாக…

நுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்

எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது…

சியர்ஸ்

“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்கு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக்…

கழுகு

“மொதல்ல அத நுப்பாட்டு!” நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன். “அங்க என்னா தேடுற… நுப்பாட்டுனு சொன்னா நுப்பாட்டு” என அழுத்தமாகக் கூறவும் படப்பிடிப்புக்குப் பொருத்தப்பட்ட விளக்கை முதலில் அணைத்தேன்.…

நவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு

“மணிபர்ச வீட்டுல விட்டு வந்துட்டேனே,” என சை.பீர்முகம்மது சொன்னபோது பதற்றம் தொற்றிக்கொண்டது. முதுமையின் மறதிதான். காரை அவசரமாகத் திருப்பும் சூழல் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இல்லை. பின்வாக்கிலேயே வீட்டை நோக்கி காரை விட்டேன். என் முன்னாள் மாணவன் நிமலன் காரை விட்டு இறங்கி, வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். சு.வேணுகோபால் பதற்றம் வேண்டாம் எனப் பதற்றமாகச்…

சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை…

கலைஞனின் தும்பிக்கை

‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது. மலேசிய நாவல் இலக்கியத்தில் இது, குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு படைப்பாக இருக்கும். இந்நாவலை, மூன்று அடிப்படைகளில்…

அக்கினி: அபோதங்களை அணிந்த பறவை

“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர். அது உண்மைதான். என் பதினேழாவது வயதில் அது நடந்தது. 1999இல் எம்.ஏ.இளஞ்செல்வன் கூலிமில் தனது நூல் வெளியீட்டுக்குப் பின்னர் அக்கினி மற்றும் பத்மினியை அழைத்து என்…

சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்

சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை. வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன.…

மலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்

எல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த…

இமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை

(1) “தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.” இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து…