
”ஒரு விந்தை!” என்று ராபர்ட் கோல்ட்மான் சொன்னார். கண்ணில் நுண்நோக்கியுடன் ஒரு கல்படிவத்தின்மேல் குனிந்திருந்த ராம்கோவிந்த் தலைதூக்கி புருவத்தை மட்டும் தூக்கினார். “இதைப்பாருங்கள்,” என ராபர்ட் கோல்ட்மான் ஒரு சிறிய கல்லை நீட்டினார். அது ஒரு பெரிய சேற்றுப்படிவப் பாறையில் இருந்து உடைந்த கீற்று. மங்கலான சிவந்த நிறத்தில் ஒரு சிப்பி போலிருந்தது. “படிமமா?” என்றபடி…