பெயர்: ஜூலி முகவரி: 16, ஜாலான் மலாக்கா அ.அட்டை எண்: (கிறுக்கலான எழுத்தை வாசிக்க முடியவில்லை.) வயது: 35 திகதி : மார்ச் 25 அறையின் உள்ளே நுழைந்து என் எதிரில் உள்ள நாற்காலியில் அமரும் முன் ஒரு கணம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். என்னை கணிப்பது போல் இருந்தது அவளது பார்வை. மெல்லிய…
Author: சண்முகசிவா. மா.
மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்
1 நீ சொன்னாய் அம்மா “உன் சோகங்களை யாரிடமும் சொல்லாதே துயர முகம் பார்த்துப் பேச தோன்றாது எவருக்கும்…” அம்மா… உண்மையிலேயே உற்சாகத்தில் இருக்கையில் மனம் உள்ளொடுங்கிகொள்கிறது நகைச்சுவை உணர்வு தடுத்துக்கொள்கிறது திறமையோ மிரட்டுகிறது கட்டுப்பாடுகள் பிளவுபடுகிறது ஆனால் சோகம்… சோகம்தான் நமக்கு நம்மை வெளிப்படுத்தி காட்டுகிறது மூலம்: Rachel Naomi Remen 2. அந்த…
எல்லாமும் சரிதான்
பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்தன. “காய்ச்ச… இப்பதான் அடங்கி வேர்க்குது டாக்டர்…” மடியில் கிடந்த குழந்தையை மார்பில் அணைத்தபடி பதற்றம் கலந்த கவலையை டிரேகன் ராஜாவின் முகத்தில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சாதாரண சளிக்காய்ச்சலுக்கெல்லாம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் டிரேகனைப் பார்க்கும்போதெல்லாம் இவன் ஏன் இங்கே வர்றான் என்றுதான் நினைப்பார் டத்தோ…
கனவு
“கனவ சொல்லவா சார்?” “ம்…சொல்லுமா.” “அம்மாவ பாக்கப்போறேன். அவங்க கால புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டு அழறாங்க. அப்ப அந்த ஆளு வருது. அம்மாகிட்டேருந்து என்னைய புடிச்சி இழுக்குது. ஒரு அறையில போயி அடைச்சி வைக்குது. அம்மாவ போயி அடிக்குது.…
மலேசிய இலக்கிய வரலாற்றில் வல்லினம்
கருவில் உதித்ததில் இருந்து வல்லினத்தை நான் பார்த்து வருகின்றேன். அதன் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வல்லினம் குறித்து எப்போது பேசினாலும் எனக்குள் ஒரு நிறைவும் சந்தோஷமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் தெரிகிறது. நானும் கடந்த 40 ஆண்டுகளாக இந்த நாட்டில் இலக்கியம் குறித்து பேசிவருகிறேன். நான் பார்த்துப்பேசி பழகக்கூடிய மனிதர்கள் எல்லாம்…
அ. ரெங்கசாமிக்கு மா. சண்முகசிவா கடிதம்…
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா அவர்களுக்கு… வணக்கம். தாங்கள் தங்களுடைய தந்தை மலாயா வந்தது குறித்தும் அது தொட்டு தொடரும் உங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் நூல் ஒன்று எழுதி வருவது அறிந்து மகிழ்ந்தேன். தங்களின் நினைவுச்சின்னம், இமயத் தியாகம், லங்காட் நதிக்கரை, முதலான நாவல்கள் எல்லாமே புனைவாக மட்டுமல்லாது அன்றைய காலத்தின் வரலாற்று பதிவுகளாகவும்…
தாயகம் பெயர்தல் : வாழ்வும் வலியும்
(மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அதன் பதிவுகள்) 20,21,22 தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை ‘இடப் பெயர்வு’ என்பது பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானதாக இருந்த போதிலும்கூட அதில் பறவைகளுக்குச் சுதந்திரம் இருந்தது. ஏனெனில் வானம் பறவைகளுக்குப் பொதுவானதாக இருந்தது. ஆனால், நிலம் மனிதர்களுக்குப் பொதுவானதாக இருந்ததில்லை. இருந்திருந்தால் அவர்கள் ஏன் கடல்…
“மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று”
டாக்டர் மா.சண்முகசிவா கெடா மாநிலத்தில் உள்ள அலோஸ்டார் நகரில் பிறந்தவர். தமிழகத்தில் மானாமதுரையில் (சிவகங்கை மாவட்டம்) பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தை கெடாவில் ‘ஜெய் ஹிந்த் ஸ்டோர்’ எனும் மளிகை கடை நடத்துவதிலிருந்து தன் வாழ்வை தொடங்கியுள்ளார். ஆரம்பக்கல்வியை ஆங்கிலப்பள்ளியில் கற்றாலும் இராமசாமி செட்டியார் எனும் தமிழ் ஆசிரியர் வீட்டில் வந்து சண்முகசிவாவுக்குத் தமிழ் போதித்தார்.…
சாமி குத்தம்
‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே ஓடிவந்த ஜிம்மியும் வால் வெட்டப்பட்டதால் தன் ஆசன வாயை அசைத்து ‘அது உண்மைதான்’ என்றது. “டேய் … என்னடா சொல்ற … நம்ம முனியாண்டி கோயிலையா…” ஆறுமுகத்திற்கு…