வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட படைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவுக்கென தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கோணங்கி சிறப்பு வருகை புரிகிறார். நவீன தமிழ் இலக்கியச் சூழலில் முக்கிய புனைவெழுத்தாளரான அவரது இலக்கிய உரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். வல்லினம் பரிசுத்திட்டத்தின் கீழ் எழுதப்பட்டு இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெற்ற படைப்புகளில் சிறந்த ஒன்று இந்த விழாவில் தேர்வுபெற்று பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த விழாவில் வழக்கறிஞர் பசுபதி அவர்கள் கலந்துகொண்டு ‘வல்லினம் 100’ இதழை வெளியிடுவதுடன் சிறப்புரையும் ஆற்றுவார்.
நல்ல முயற்சி. பாராட்டுகள்- வாழ்த்துகள்!
வல்லினம் நூறாவது இதழை எட்டுவது குறித்து மகிழ்ச்சி.வாழ்த்துக்கள். தொடர்ந்து என்னுடைய ஆதரவு உண்டு.
நான் அந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறேன்.- முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி ,சிங்கப்பூர்.
ஐயா வணக்கம்.
வெளிநாடாக இருந்தாலும் தாய்மொழி – தமிழ்மொழி மீது பற்றின் காரணமாக தாங்கள் செய்யும் சேவைக்கு தலை வணங்குகிறேன். தமிழகத்தின் தலைநகரில் இருந்து இந்த வாழ்த்து தங்களுக்கும், குழுவினருக்கும் உரித்தாக்குகிறேன்.
நன்றி
நேயத்துடன்
கன்னிக்கோவில் இராஜா
ஆசிரியர், மின்மினி ஹைக்கூ இதழ்
சென்னை.
9841236965
உண்மையில் மனநிறைவாக இருக்கிறது. 1970திலிருந்து 73வரை மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருந்த பொழுது தீவிர இலக்கியம் பற்றி அதிகமாக சிந்தித்தேன். தமிழக நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடர்ந்து கடல் கடாந்த தமிழகம் என்ற
பெயரில் தொடர்ந்து மலேசிய கடிதம் எழுதி வந்த வேளையில் தமிழக இலக்கிய முயற்சிகளில் நாட்டம் ஏற்பட்ட பொழுது மலேசியாவிலும் அப்படியான முயற்சிகள் மேற்கொண்டால் அன்றி அடுத்த கட்ட நகர்வை மலேசியாவில் ஏற்படுத்த முடியாது என்றறிந்தேன். இதன் காரணமாக முதல் கட்டமாக மாதாந்திர சிறுகதை கருத்தரங்ங்கை
ஏற்படுத்தினேன்.மிகப்பெரிய ஆதரவுகிடைத்து வெற்றிகரமாக நடைபெற்ற பொழுது பத்திரிகைகளின் போட்டியால் அக்கருத்தரங்கு ஓர் “அரசியலாக்கப் ” பட்டது.நான் சோர்வடைந்தேன். நான் செயலாளராக இருப்பதில் சங்கடங்களை ஏற்படுத்தினார்கள்.இக்காலகட்டத்தில்
நவீன் “காதல் ” சிற்றிதழ் வருப்போவதாகக்கூறி முதல் இதழில் என் பேட்டி வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரே எடுத்தபேட்டி முதல் இதழில் வெளிவந்தவுடன் அடுத்தடுத்து நான் யாருடைய பேட்டியெல்லாம் வரவேண்டுமென்று நினைத்தேனோ அந்த ஆளுமைகளின் பேட்டிகள் மிகச்சிறப்பாக அட்டைப்படத்தில் எழுத்தாளர்களின் படங்களோடு வந்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது. நான் செய்ய நினைத்ததையெல்லாம் நவீன் செய்தார்.காதல் நின்று வல்லினம் சிற்றிதழை ஆரம்பித்த பொழுது அதற்கான செலவை நானறிந்து நான்
ரெ.கார்த்திகேசு போன்றவர்கள் மாதாமாதம் பகிர்ந்து கொண்டோம். அக்காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வல்லினத்தில் வெகுமக்கள் பத்திரிகைகளில் எழுமுடியாத பல கட்டுரைகளை வல்லினத்தில் எழுதினேன்.என்னைப்பொறுத்தவரை இலக்கிய முயற்சிகளில் மனநிறைவாக
நான் ஈடுபாடுகொண்ட மகத்தான நேரமது.நவீனின் தொடர் வற்புறுத்தல்கள் என்னையே நான் அடையாளப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.பின் வல்லினம்
அச்சு இதழ் நிறுத்தப்பட்டு இணைய இதழாக வந்த பொழுது எனது தொடர்புகள் குறைந்தன.எனக்கில்லாமல் போன கணினி அறிவே ஒதுங்கியிருக்கச்செய்தன.எனக்குள் இலக்கிய இடைவெளிகள் ஏற்பட்டன.
தொடர்ந்து வல்லினம் நிகழ்வுகளில் கலந்து கொண்டேன்.கணினி அறிவு மிகமுக்கியமென்பதை அறிய வல்லினமே காரணம்.இரவு பகலாக நானே முயன்று கைபேசி வழியாக தமிழில் பதிவுகள் செய்ய கற்றுக்கொண்டேன்.இப்பொழுது இப்பதிவை நான் எழுத எனக்கு அடிப்படையாக உந்து சக்தயாகவிருந்தது வல்லினமே.
இந்த 100 இதழ் தொகுப்பில் ஏதாவது ஒரு மூலையில் நானும் இருபேனென்று நினைக்கிறேன். நம்புகிறேன்.தொடர்ந்து
வல்லினம் மீண்டும் அச்சில் வரவேண்டுமென்பது என் வேண்டுகோள்.சோர்வடைந்திருக்கும் என்னைப்போன்ற பலருக்கு அது உத்வேகத்தைத் தருமென்று பெரிதும் நம்புகிறேன்.பழைய வல்லின அச்சு இதழ்களைஓர் ஆய்வு செய்தால் எத்தனை ஆளுமைகளை எழுத வைத்தது என்பது புரியும்.எனது தெருநாடகம் பற்றிய கட்டுரையை வேறு எங்கும் என்னால் நிச்சயம் எழுதியிருக்க முடியாது. வல்லினம் நிச்சயம் அச்சாக வருமென்று நம்புகிறேன்.
ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே
சொல்ல வேண்டும். கணினியில் வந்த
எந்த உலகலாவிய தமிழ்ப் படைப்பும் மக்களிடம் போய்ச்சேரவில்லை. சிறப்பாகப் பேசப்படவுமில்லை. ஆயிரககணக்கான படைப்புகள் வந்தாலும் எதுவும் மனதில் நிற்கும்படியாக இல்லை.இந்த வல்லினம் 100 சிறப்பிதழ் அச்சில் வருவதே அதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். காலம்காலமாக 100வது இதழ் வரலாறு சொல்லும்.
சை.பீர்முகம்மது.