வல்லினம் போட்டி படைப்பு முடிவுகள்

01வாசகர்களும் எழுத்தாளர்களும் வழக்கமாக வல்லினத்துக்கு அனுப்பும் படைப்புகளையே ஒரு போட்டியாக நடத்தி, அதன் வழி சிறந்த படைப்புகளை வெளிக்கொணரலாம் என்ற திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கம்பாரில், நண்பரும் வல்லினம் குழு எழுத்தாளருமான கங்காதுரையின் வீட்டில் நடந்த சந்திப்பில் முடிவானது. வல்லினம் போட்டி படைப்புகள் குறித்த அறிவிப்பு வந்தது முதலே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் திட்டமிடப்பட்டன. இந்த போட்டியின் நோக்கம் சிறந்த படைப்புகளையும் படைப்பாளர்களையும் அடையாளம் காண்பதுமட்டும் இன்றி வல்லினம் மாதாந்திர படைப்புகளை திரட்டிக்கொள்வதாகவும் இருந்தது. ஆகவே விதிமுறைப்படி வாசகர்கள் மே மாதம் இறுதிக்குள் தங்கள் படைப்புகளை அனுப்பிவிட வேண்டும். அனுப்பப்படும் படைப்புகளில் தகுதியானவை மட்டும் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு, அவற்றில் சிறந்த ஒரு படைப்பை மட்டும் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்.

அவ்வகையில் இந்த போட்டிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. ஆயினும் பலருக்கும் கட்டுரைக்கும் பத்திக்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற குழப்பம்   இருந்தது. பலர் பத்திகளை எழுதி கட்டுரை  பிரிவுக்கு அனுப்பியிருந்தனர்.  சிறு சிறு துணுக்குச் செய்திகளையும் சிலர் பத்தி பிரிவுக்கு அனுப்பி யிருந்தனர். சிறுகதைகள் அதிகமாக எழுதப்பட்டிருந்தன. மொத்தம் 34 சிறுகதைகள்  வந்திருந்தன. பத்திகள் 12ம் கட்டுரைகள் 6ம் எழுதப்பட்டிருந்தன.  சில படைப்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகளையும் அனுப்பியிருந்தனர். அவற்றில் சிறந்த ஆறு சிறுகதைகளையும் இரண்டு பத்திகளையும் ஒரு கட்டுரையையும் மட்டுமே மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை வல்லினம் செறிவாக்கம் செய்து வெளியிட்டு இருந்தது. அவற்றின் பட்டியல் பின்வருமாறு.

சிறுகதைகள்:

மன்னிப்பு – ஈப்போ கலைசேகர்
நுரை –  ஐஸ்வரியா
பிரதி – செல்வன் காசிலிங்கம்
புதிதாக ஒன்று –  எஸ்.பி பாமா
நகர்வு – மதியழகன் முனியான்டி
சாம்ராஜ்சியம் – உதயகுமாரி கிருஷ்ணன்

கட்டுரை:

நிகழ்காலத்தில் வாழ்வோம் –  மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்

பத்தி: 

ஆட்டம் – ஈப்போ கலைசேகர்
நம் வாழ்வில் சிறுத்து வரும் சிரிப்பு-   மணிமால மதியழகன். சிங்கப்பூர்

மேற்கண்ட படைப்புகளில் சிறந்த ஒன்றை அடுத்தக்கட்ட நீதிபதிகள்குழு  இனி தேர்வு செய்யும். முடிவுகள்   17.9.2017இல் நடைபெறும் வல்லினம் கலை இலக்கிய விழாவில் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். இப்போட்டியில் ஆர்வத்தோடு பங்கேற்ற அனைவருக்கும்

நன்றி
வல்லினம் குழு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...