வல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் சாம்ராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சுமார் 100 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில் நவீன இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும். எனவே நவீன இலக்கியப் பரிட்சயம் உள்ளவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ஏற்பாட்டுக்குழு வலியுறுத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் சில மலேசிய நூல்கள் வெளியிடப்படுவதோடு வல்லினம் விருதளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வல்லினம் விருது இதற்கு முன்பு 2014இல் எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசிய இலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் இவ்விருந்து ஐயாயிரம் ரிங்கிட் தொகையுடன் விருது பெறும் எழுத்தாளரின் நூல் ஒன்றும் பதிப்பித்து வெளியீடு செய்யப்படும்.
வல்லினம் இந்த நிகழ்ச்சிக்காக இலவச பேருந்து வசதியை ஏற்பாடு செய்து வருகிறது. பேருந்து கோலாலம்பூரிலிருந்து 20.12.2019 காலை 09.00 மணிக்குப் புறப்படும். பேருந்தில் இணைந்து வர விரும்புபவர்கள் ம.நவீன்: 0163194522 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கட்டணம் ரி.ம 100 ஆகும். இக்கட்டணத்திற்கான இருநாள் தங்கும் வசதி உணவுகள் என அனைத்தும் ஏற்பாடு செய்துத்தரப்படும்.
நிகழ்ச்சி நிரல்
20.12.2019 – வெள்ளி (பொது நிகழ்ச்சி)
மாலை 4.00 : பதிவு
மாலை 6.00 : சிற்றுண்டி
இரவு 7.00 – 7.30 :
– சீ.முத்துசாமி நாவல் (மலைக்காடு) வெளியீடு
– சு.வேணுகோபால் உரை
இரவு 7.30 – 8.00 :
– ம.நவீன் நாவல் (பேய்ச்சி) வெளியீடு
– அருண்மொழி நங்கை உரை
இரவு 8.00 – 9.00 :
– நாவல் எனும் கலை – ஜெயமோகன் உரை
இரவு 9.00 : இரவு உணவு
21.12.2019 – சனி
காலை 7.30 – 8.30 : காலை சிற்றுண்டி
காலை 8.30 – 10.30 :
– வல்லினம் பரிசுக்கதைகள்
– (அமர்வு 1) – சமகால சிறுகதைகள் : சு.வேணுகோபால்
– கேள்வி பதில் அங்கம்
காலை 10.30 – 11.00 : தேநீர்
காலை 11.00 – மதியம் 1.00 :
– (அமர்வு 2) – தற்கால உலக இலக்கியம் – ஜெயமோகன்
– கேள்வி பதில் அங்கம்
மதியம் 1.00 – 2.30 : மதிய உணவு
மதியம் 2.30 – மாலை 4.30 :
– (அமர்வு 3) – நாட்டார் வழக்காற்றியல் – சு.வேணுகோபால்
– கேள்வி பதில் அங்கம்
மாலை 4.30 – 5.00 : தேநீர்
மாலை 5.00 – இரவு 7.00 : ஓய்வு
இரவு 7.00 ~ 9.00 :
– (அமர்வு 4) – மரபு இலக்கியம் – ஜெயமோகன்
– கேள்வி பதில் அங்கம்
இரவு 9.00 : இரவு உணவு.
22.12.2019 ஞாயிறு
காலை 7.00 – 8.00 : காலை சிற்றுண்டி
காலை 8.00 – 10.00 :
– மகாராணியின் Checkmate (ம.நவீன்) கவிதை தொகுப்பு வெளியீடு
– ( அமர்வு 5) – சமகால கவிதைகள் – கவிஞர் சாம்ராஜ்
காலை 10.00 – 10.30 : தேநீர்
காலை 10.30 – மதியம்1.00: (பொது நிகழ்ச்சி)
– சை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது விழா
– அக்கினி வளையங்கள் நாவல் வெளியீடு
– சு.வேணுகோபால் நாவல் விமர்சனம்
– ஜெயமோகன் உரை: இலக்கியம் , விமர்சனம், படைப்பாளன்
மதியம் 1.00: மதிய உணவு/ நிறைவு
23.12.2019 (திங்கள்)
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.
இலக்கிய முகாமைத் தொடர்ந்து டிசம்பர் 23 – 25 வரை நடைபெறும் அருளாளர் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருந்து வழங்கப்படுகிறது. இதற்கு முன் இவ்விருது இசைச்சுடர் சிவசுப்ரமணியம், டாக்டர் எல்.ஜெயபாரதி, பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ், வயலின் கலைஞர் ஜெயலட்சுமி, குலவீரசிங்கம், சங்கபூஷணம் ருக்மிணி அம்மாள், கர்னல் கரு. சாத்தையா, மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐயாயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள இவ்விருது வங்கும் விழா டிசம்பர் 23 மாலையில் நடைபெறும்.
1 comment for “மூன்று நாள் இலக்கிய முகாம்”