ந. பாலபாஸ்கரன் ஆவணப்படம்

இது 2017இல் இயக்கிய ந. பாலபாஸ்கரன் அவர்களின் ஆவணப்படம். தொண்டை புற்றின் காரணமாக முற்றிலும் குரலை இழந்த நிலையில் இந்த ஆவணப்படத்தை இயக்க எங்களுக்கு ஒத்துழைத்தார் பாலபாஸ்கரன். சிங்கை வாசகர் வட்ட ஆதரவும் எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்ததால் இந்த ஆவணப்படம் சாத்தியமானது. எழுத்தாளர் லதாவும் இந்த ஆவணப்படத்துக்கு பங்களித்தார். பாலபாஸ்கரன் எழுத்தில் வழங்கிய பதில்களை ஆசிரியர் முருகனைக் கொண்டு வாசிக்க வைத்து பின்னணியில் இணைத்தோம். முழுமையடைந்ததும் அவர் பார்வைக்கு அனுப்பி வைத்தோம். ஆவணப்படத்தை வெளியிடுவதில் பாலபாஸ்கரன் அவர்களுக்கு மனத்தடை இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் தன் உருவத்தை பார்ப்பதாகவும் அது தன்னைப் போல இல்லை என்றும் மின்னஞ்சலில் கூறினார். தான் வாழும் வரை அதனை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். எனவே அவர் நினைவுகளைச் சொல்லும் ஆவணப்படம் இந்த வல்லினத்தில் வெளிவருகிறது. இந்த ஆவணப்படத்தில் மற்றுமொரு சுவாரசியம் டிசம்பர் 26, 2016ல் சிங்கப்பூர் தஞ்சோங் பகார் ரயில் நிலையம் மூடப்பட்டது. மே 3, 1932 ல் தொடங்கப்பட்ட அந்த இரயில் நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. எனவே மூடப்படுவதற்கு முதல் நாள் பொது மக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரும்பாலான ஆவணப்படத்தை அங்குச் சென்று இயக்கினோம். பெரும்பாலான இரயில் நிலைய காட்சிகளைப் பதிவு செய்தோம். அவ்வகையில் இந்த ஆவணப்படம் தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக்கொண்டது.

2 comments for “ந. பாலபாஸ்கரன் ஆவணப்படம்

  1. Manimaran A/L Ammasy
    March 13, 2023 at 8:23 am

    வாழ்த்துக்கள் வல்லினம். பாலபாஸ்கரன் எனும் ஆளுமையின் ஆவணப்படமும் செய்திக்குறிப்புக்களும் சிறப்பு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...