
இன்று மலேசியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக இலக்கியப் புனைவுகளின்வழி தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் ம.நவீன். கவிதை, கட்டுரை, நாவல், விமர்சனம், பயண இலக்கியம், நேர்காணல்கள் என நீளும் படைப்புகளின் வரிசையில் அவரின் சிறுகதைகள் அதன் தனித்தன்மைகளால் சிறப்பிடம் பெறுகின்றன. நவீனின் 90 விழுக்காடு சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு மண்டை ஓடி 2015இல் வெளியீடு…