
பாட்டு என்பது மொழியின் உச்ச வடிவம். ஒரு மொழியானது வளப்பத்தையும் அதன் முதிர்ச்சியையும் நுட்பத்தையும் அடைவது பாட்டு வடிவத்தில்தான். தன்னைப் பற்றியும் தன்னைச் சார்ந்துள்ள சமூகத்தையும் இயற்கையையும் சொற்செறிவுடன் பண்தொடுத்து அணிப்பூட்டி மொழியில் அழகுப்பட தொடுப்பதே பாட்டு. சொல் நயம், பொருள் நயம், உணர்ச்சிச் செறிவு, சுதந்திரப் போக்கு, கற்க கற்க முடிவில்லா புதுச்சுவை தருதல்…