Tag: கே.பாலமுருகன்

தேவதைகளற்ற வீடு: ஒளிந்து விளையாடும் கதைகள்

மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களுள் ஒருவர் கே. பாலமுருகன். ஈராயிரத்தின் மத்தியில் புனைவுகளை எழுதத் தொடங்கிய அவர், சிறுகதை வடிவங்களில் நிகழ்த்திய பரிட்சார்த்த முயற்சிகளாலும் அதுவரை மலேசியத் தமிழ்ப் புனைவுகளில் அதிகம் வெளிப்படாத விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை எழுதியதாலும் உடனடியான கவனத்தைப் பெற்றார். தோட்டப்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்து பெருநகருக்குள் நுழைபவர்களின் அகநெருக்கடிகளையும்…

கே.பாலமுருகனின் நாவல்கள்: ஒரு விமர்சனப்பார்வை

மலேசிய இலக்கியத்தில் கே.பாலமுருகனின் நுழைவு பலவகையிலும் முக்கியமானது. நகர நெருக்கடிகளிலும் புறநகரத் தனிமையிலும் அடையாளம் தொலைத்த விளிம்புநிலை மனிதர்கள் அதிகமும் நடமாடியது இரண்டாயிரத்துக்குப் பின் எழுதப்பட்ட பாலமுருகனின் சிறுகதைகளில்தான். இளம் படைப்பாளியாக எழுதத் தொடங்கியபோதே உலகத் தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் தன் புனைவுகளை எடுத்துச்செல்ல தனக்கான வலைத்தளத்தைத் தொடங்கிய (2008) முன்னோடிகளில் ஒருவர். அதுபோல,…