
1. மலேசிய மூத்த தமிழ்ப் படைப்பாளிகளில் சை.பீர்முகமதுவிற்குத் தனித்த இடம் உண்டு. ‘வேரும் விழுதுகளும்’ பெருந்தொகுப்பிற்காக அவர் ஆற்றியிருக்கும் பணி மதிக்கத்தக்கது. அவரது சிறுகதைகளில் சில உயர்தரத்தை எட்டியிருக்கின்றன. இப்போது ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் மூலம் தனது இலக்கியக் கடமையையும் வரலாற்றுக் கடமையையும் ஒருசேர நிகழ்த்தியிருக்கிறார். இந்நாவலை எழுதியதின் வழியாகத் தரமான படைப்பிலக்கியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக்…